By Village Missionary Movement
Wednesday, 09-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 09.08.2023
அஸ்ஸாம்
"கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?" - ரோமர் 8:36
அஸ்ஸாம் மாநிலம் ஆயிரக்கணக்கான பழங்குடியினத்தவரை உள்ளடக்கியது. இவர்கள் மிகவும் கைதேர்ந்த வேட்டைக்காரர்கள் ஆவர். "இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்" என்ற பாடல் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இப்பாடல் இந்த அஸ்ஸாமில் ஓர் இரத்தசாட்சி தன் மரணதருவாயில் பாடிய பாடல் ஆகும். எத்தகைய பாடுகளும் கிறிஸ்துவின் அன்பை விட்டு தன்னை பிரிக்க முடியாது என்ற தைரித்துடன் விசுவாசத்துக்காக வாழ்ந்து மரித்த ஒருவரின் அனுபவ வரிகள் இது.
அமெரிக்க பாப்டிஸ்ட் மிஷன் மூலம் அனுப்பப்பட்ட மிஷனெரி, "கரோ" பழங்குடியினர் மத்தியில் ஊழியம் செய்ய சென்றார். அப்போது இரு பிள்ளைகளுள்ள ஒரு சிறு குடும்பம் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டது. இதனால் கோபங்கொண்ட கிராமத்தலைவர் கிராம மக்கள் அனைவரையும் வரவழைத்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட குடும்பத்தை கிராம மக்கள் நடுவில் நிறுத்தி உன் நம்பிக்கையை விட்டுவிடு இல்லையெனில் மரணத்தை சந்திக்க நேரிடும் என்றனர். ஆனால் அந்த மனிதனோ "நான் இயேசுவை பின்பற்ற முடிவு செய்தேன் பின் திரும்ப மாட்டேன்"என்றார். "அந்த மனிதனின் மறுப்பால் கோபமடைந்த தலைவர் இரண்டு குழந்தைகளையும் அம்பு எய்து கொன்றார். ஆனாலும் அந்த மனிதன் பின் திரும்ப மாட்டேன் என்றதும் அவன் மனைவியையும் கொன்றார்". பின்பு “உனக்கு கடைசி வாய்ப்பு”, என்று அம்பை அந்த மனிதனை நோக்கி குறிபார்த்தபோது, "சிலுவை என் முன்னே, உலகம் என் பின்னே பின் நோக்கேன் நான்" என்று கூறினதும் அவன் கொல்லப்பட்டான்.
இந்த மனிதனுடைய மரணத்தோடு கிறிஸ்தவம் நம் கிராமத்தில் ஒழிந்து விடும் என்று அக்கிராமத்திலுள்ள எல்லோரும் நினைத்தனர். அதுதான் இல்லை. அந்த மனிதனின் மரணம் கிராமத் தலைவரின் உள்ளத்தை அசைத்தது. 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த உலகத்திற்கு வந்த ஒருவருக்கு ஒரு முழு குடும்பமும் இறக்க வேண்டுமானால் இதில் ஏதோ ஒரு சக்தி உள்ளது. நானும் அந்தக் கடவுளைப் பற்றி அறிய வேண்டும் என்றார். இச்செய்தி அப்பகுதி முழுவதும் ஒரு அசைவை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மக்கள் கூட்டமாக இயேசுவை ஏற்றுக் கொண்டனர். அமெரிக்க பாடல் ஆசிரியர் வில்லியம் ஜென்சன் ரெனால்ட்ஸ் 1959 சட்டமன்ற பாடல் புத்தகத்தில் இப்பாடலை சேர்த்தார்.
இதை வாசிக்கும் அன்பரே! எழுப்புதலை விரும்புகிறீர்களா? எழுப்புதலுக்காக ஜெபிக்கிறவர்களா நீங்கள்? அப்படியானால் இப்படிப்பட்ட விசுவாசமும், வைராக்கியமும் நமக்கு வேண்டும். இவை இல்லாததினால் தான் எழுப்புதல் தாமதிக்கிறதோ?. . . இது போன்ற விசுவாசமும், வைராக்கியமும் கிறிஸ்துவின் மீதுள்ள அன்பும் நம் ஒவ்வொருவரையும் பற்றி பிடிக்க ஜெபிப்போம்.
- Mrs. ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு
திருநெல்வேலி வாலிபர் எழுப்புதல் முகாமிற்காக ஜெபிக்கின்ற செயல்படுகின்ற 7000 பேர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864