Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08-08.2023
Share:

By Village Missionary Movement

Monday, 07-Aug-2023

இன்றைய தியானம்(Tamil) 08-08.2023

 

குஜராத்

 

"பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்;…” - சங்கீதம் 22:27

 

இந்தியாவின் ஒரு மாநிலமான குஜராத்தில் கிறிஸ்தவம் ஒரு சிறுபான்மை மதம். பல நூற்றாண்டுகளாக குஜராத் கடற்கரையில் உள்ள டாமன் மற்றும் டையூ பகுதியை போர்த்துகீசியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள் கத்தோலிக்க மதத்தை கொண்டு வந்தனர். 16ம் நூற்றாண்டில் குஜராத் முதன்முதலில் கிறிஸ்தவத்துடன் தொடர்பு கொண்டது. பிரெஞ்சு மிஷனெரி ஜோர்டானஸ் கேடலானி 1320இல் சூரத்திற்கு வந்தார். அவர் குஜராத்தில் ஊழியத்தை தொடங்கிய முதல் ஐரோப்பியர் ஆவார்.

 

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 1813ம் ஆண்டின் பட்டயச்சட்டம் பிரிட்டிஷ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு கிறிஸ்தவ மிஷனெரிகள் நுழைவதற்கு அனுமதித்தது. மிஷனெரிகளில் ஜான் டெய்லர் (1821), ஜோசப் டெய்லர் (1852), ஜே.வி.எஸ். டெய்லர் (1881) மற்றும் டாக்டர் ஜி.பி. டெய்லர் ஆகியோர் அடங்குவர். மிஷனெரிகள் 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் பள்ளிகளை நிறுவினர். குஜராத்தில் வட இந்திய திருச்சபையின் ஒரு மறைமாவட்டம் உள்ளது. இது ஊசூஐ மற்றும் ஊளுஐ சர்ச்சுகளுடன் இணைந்து மிகப்பெரிய புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவப் பிரிவாக உள்ளது. சால்வேஷன் ஆர்மி மற்றும் அலையன்ஸ் தேவாலயங்களையும் இம்மாநிலத்தில் காணலாம்.

  

குஜராத் மக்கள் கிறிஸ்துவை கண்டடைய வேண்டும் என்பதற்காகவே தேவன் அங்கே அநேக ஊழியங்களை எழுப்பியுள்ளார். அப்படி ஊழியம் செய்யும்போது அநேக எதிர்ப்புகளை ஊழியக்காரர்கள் சந்திக்கின்றனர். ஒருநாள் மாலை கூடுகைக்காக இரண்டு ஊழியக்காரர்கள் மலைப்பாதையின் ஊடாக கடந்து சென்று கொண்டிருந்தனர். இந்த இரு ஊழியக்காரர்களையும் இன்றைய தினம் உயிரோடு விடக்கூடாது என்ற எண்ணத்துடன் ஒரு குழுவினர் துப்பாக்கிகளுடன் பதுங்கி இருந்தனர். இவர்கள் அந்த வழியாய் செல்லும்போது அவர்கள் குறி பார்த்து சுட ஆரம்பித்தனர். தேவன் அவர்களுக்கு பாதுகாவலராக இருந்து துப்பாக்கிகளிலிருந்து ஒரு தோட்டா கூட வெளியே வராதபடிக்கு பாதுகாத்தார். சுடுவதற்கு கிளம்பி வந்த கூட்டம் "இது என்ன மாயம்" என்று நினைத்து ஊழியக்காரர்களின் கால்களிலே விழுந்து "இந்த தெய்வத்தை பற்றி எங்களுக்கும் சொல்லுங்கள். நாங்கள் அவரை ஏற்றுக்கொள்கிறோம்" என்று அங்கேயே அமர்ந்து இயேசுவை தங்கள் இரட்சராக ஏற்றுக்கொண்டனர். இப்படி அநேக அற்புதங்களை இயேசு இன்றும் குஜராத் மாநிலத்தில் நடத்திக்கொண்டு வருகிறார். ஆமென்! அல்லேலூயா! 

- Mrs. பேர்லின் செல்லாபாய்

 

ஜெபக்குறிப்பு:

திருநெல்வேலி வாலிபர் எழுப்புதல் முகாமில் செய்தி கொடுக்கும் தேவதாசர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet