Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 06-08.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 06-Aug-2023

இன்றைய தியானம்(Tamil) 06-08.2023 (Kids Special)

 

சுட்டிப்பெண் பாலின்

 

"…கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்" - லூக்கா 11:10

 

குட்டிச் செல்லங்களே எப்படி இருக்கீங்க? School தொடங்கி இரண்டு மாதமாகி விட்டது. எப்படி போகுது? ரொம்ப மகிழ்ச்சியா இருக்கா? உன்னுடன் படிக்கும் மற்ற பிள்ளைகளை பார்த்தவுடன் உனக்கும் அவர்களைப்போல புது டிரெஸ், புது பேக், புது pen, box இப்படி எல்லாமே புதுசா வாங்கணுபோல ஆசையா இருக்குதானே. இப்படி தான் மூன்றாம் வகுப்பு படிக்கும் பாலினுக்கும் ஒரு ஆசை வந்துச்சு. அந்த ஆசையை அவ யாரு கிட்ட சொன்னானு தான் இப்ப பார்க்க போறோம்.

 

பாலின் பயங்கர சுட்டிபெண். நன்றாகப் படிப்பாள், பாடுவாள், டான்ஸ் ஆடுவாள் மற்றும் பெற்றோருக்கும் நன்கு கீழ்ப்படிவாள். பாலினுக்கு பழங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அன்றைக்கு வீட்டில் Snacks எதுவும் இல்லாததால் school க்கு Lunch மட்டும் எடுத்து கொண்டு போய்விட்டாள். Evening snacks time வந்தது. எல்லோரும் snacks சாப்பிட ஆரம்பித்தார்கள். அவர்களை பார்த்த பாலினுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. பழம் சாப்பிடனும் போல இருந்தது. பாலினுக்கு அந்த மாணவியிடம் போய் எப்படி கேட்பது என்று தெரியவில்லை. மாறாக கண்களை மூடி இருதயத்திற்குள் இயேசப்பா எனக்கும் மாதுளை பழம் தாங்க என்று ஜெபித்தாள். School முடிந்தது.  

 

Schoolமுடிந்து வீட்டிற்கு வந்த பாலினுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அது என்ன தெரியுமா? அவள் ஆசைப்பட்டு இயேசப்பாவிடம் கேட்ட அதே மாதுளை பழம் உரித்து தட்டில் வைக்கப்பட்டிருந்தது. பாலினுக்கு ஒரே சந்தோஷம். அம்மாவிடம் வேகமாக ஓடி அம்மா நான் School க்கு போகும் போது நம்ம வீட்டில் பழம் எதுவுமே இல்லையே இப்ப எப்படி வந்தது என்று கேட்டாள். உடனே அம்மா சொன்னாங்க மதியம் ஒரு தாத்தா இந்த பழத்தை என்னிடம் கொடுத்து இதை உன் பிள்ளைகள் வந்தவுடன் கொடு என்று சொன்னார்கள் என்றாள். உடனே பாலின் தன் Schoolல் நடந்ததை தன் அம்மாவிடம் சொல்லி இயேசப்பாவுக்கு நன்றி சொல்லி விட்டு அந்த பழத்தை சாப்பிட்டாள்.

 

குட்டி தம்பி, தங்கச்சி பார்த்தீங்களா பாலின் தன்னோட ஆசையை யார்கிட்ட சொன்னாள் என்று! அவள் இயேசப்பா கிட்ட ஜெபத்தின் மூலம் சொன்னவுடன் அவளுக்கு இயேசப்பா தந்து விட்டாங்க பார்த்தீங்களா? இதுபோலத்தான் உன்னோட ஆசைகளையும் இயேசப்பாகிட்ட சொல்லிவிடு. இயேசப்பா நிச்சயம் நிறைவேற்றுவாங்க. Ok வா.

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al