Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04-08.2023
Share:

By Village Missionary Movement

Friday, 04-Aug-2023

இன்றைய தியானம்(Tamil) 04-08.2023

 

அமைதலுள்ள வாழ்வு 

 

"…ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்ய வேண்டும்.” - 1 தீமோ. 2:2

 

ஆகஸ்ட் மாதம் என்றாலே சுதந்திர தினம்தான் நம் நினைவுக்கு வரும். "மக்களாட்சி என சொல்லும் இந்திய தேசத்தில் மக்களால் மக்களுக்காக ஆட்சி என்பது போர்வையாக உள்ளது" என அநேக நேரங்களில் புலம்புகிறோம். அதற்கு வேதம் நமக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுக்கிறது, "நீங்கள் பக்தியோடு, நல்லொழுக்கத்தோடு, கலகமில்லாமல் அமைதியாய் வாழலாம் என்று. அதற்கான கட்டளை நீங்கள் ராஜாக்களுக்காகவும், அதிகாரத்திலுள்ளவர்களுக்காகவும் ஜெபம் பண்ணவேண்டும்" என்பதே.

 

வேதத்திலே எப்போதும் ஆசீர்வாதத்தை, வாக்குத்தத்தத்தை ஒரு கட்டளையோடுதான் கொடுத்திருப்பார். அனைவரும் விரும்பும் அல்லது அனைவருக்கும் தேவையான இந்த வாக்குத்தத்தத்தை பெற எளிய வழி தலைவர்கள், அதிகாரத்திலுள்ளவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். நமக்கு கடினமான காரியமல்ல. தலைவர்கள், அதிகாரத்திலுள்ளவர்களும் மனிதர்களே! நம்மைப்போல அவர்களும் குறைவுள்ளவர்கள்தான். அவர்கள் குறைகளை மனிதர்களிடம் பேசாமல் தேவனிடம் கூறி அவர்களை ஜெபத்தில் தாங்கும்போது நாம் கலகமில்லாமல் அமைதலாய் வாழலாம். தன் நலத்தில் ஒரு பொதுநலம். தலைவர்கள், அதிகாரிகள் பெலனாய் பாதுகாப்பாய் குறைகள் இல்லாமல் இருந்தால் நாம் நல்லொழுக்கத்தோடு கலகமில்லாமல் இருக்கலாம். எஸ்தர் புஸ்தகம் அதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் உபவாசித்து ஒருமனப்பட்டு ஜெபித்தபோது துக்கமும், அழுகையும், புலம்பலும் மாறி வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று. அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா வெளியரங்கமாய் பலனளிப்பார். (மத்தேயு 6:4) என்ற வசனத்தின்படி நீங்கள் ஜெபிக்கும் ஜெபம் கலகமில்லாமல் வாழ வழி செய்யும்.

 

பிரியமானவர்களே, நாம் அமைதலுள்ள வாழ்வு வாழ ஆசைப்படுகிறவர்கள்தானே. அப்படியானால் தலைவர்களுக்காகவும், அரசு அதிகாரிகள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்க வேண்டியது நம் கடமை என்று உணர்வோம். நாம் சின்ன எளிய ஜெபத்தை செய்யாமல் விட்டுவிட்டதால்தான் கலகம் என உணர்ந்து இன்றிலிருந்து ஜெபம் செய்வோம். ஆசீர்வாதத்தோடு உள்ள கட்டளை என சொல்லி, "நம் பிள்ளைகளின் வாழ்நாள் நீடிப்பதற்காக பிள்ளைகளிடம் பெற்றோரை கனம் பண்ணு" என சொல்லி கடைபிடிக்க உதவுவது போல, கலகமில்லாமல் நீடித்த வாழ்வு வாழ தலைவர்கள், அதிகாரிகளுக்காய் ஜெபிக்க கற்று கொடுப்போம். குடும்ப ஜெபத்தில் தினமும் தேசத்திற்காய் ஜெபிக்கலாம். பெண்கள் ஐக்கியம், ஆண்கள் ஐக்கியம் என விசுவாசிகளோடு கூடும் போது தேசத்திற்காய் ஜெபிப்போம். தேசத்தில் மாற்றங்களைக் காண்போம்.

- Mrs.ஜோதி ஸ்டாலின்  

 

ஜெபக்குறிப்பு 

திருநெல்வேலியை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து வாலிபர் எழுப்புதல் முகாமிற்கு அநேக வாலிபர்கள் கலந்துகொள்ள ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet