By Village Missionary Movement
Wednesday, 02-Aug-2023இன்றைய தியானம்(Tamil) 03-08.2023
மத்தியப் பிரதேசம்
"கர்த்தரே ஆவியானவர் கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலை உண்டு" - 2 கொரி 3:17
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களில் ஒன்றாகும். இந்த மாநிலம் வட இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களுக்கு செல்வதற்கு ஒரு பிரதானமான வழித்தடமாகும். இந்த பெரிய மாநிலத்தில் வெறும் 0.26% மக்கள் மட்டுமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கிறிஸ்தவர்களாக வாழ்கின்றனர். ஹிந்தி பிரதான மொழியாக இருந்தாலும் மால்வி போன்ற மொழி பேசுகின்ற ஆதிவாசி இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். விவசாயம் பிரதானமான தொழிலாக உள்ளது.
1800 களில் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் என்ற இடத்தில் கத்தோலிக்க குழுவினர் வந்து சுவிசேஷத்தை அறிவித்து ஜனங்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளையும் செய்து அந்த பகுதியை சுவிசேஷ மையமாக்கினர். அதை தொடர்ந்து பின்நாட்களில் அநேகர் மத்தியப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்குச் சென்று சுவிசேஷத்தை அறிவித்தனர். அவர்களில் கேரளாவை சேர்ந்த ராணி மரியா வட்டலில் (1954-1995) என்ற மிஷனெரி குறிப்பிடத்தக்கவர். இவர் இந்தூர் பகுதிகள் சுற்றி திரிந்து சுவிசேஷத்தையும், கல்வி அறிவையும், சமூக நீதி செயல்பாடுகளையும் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட ஜனங்களுக்கு கற்றுக் கொடுத்தார். இவருடைய செயல்பாடுகளை பார்த்து எரிச்சலடைந்த ஜமீன்தார்கள் அவரை இந்தூர் அருகிலுள்ள ஒரு இடத்தில் வைத்து கத்தியால் குத்தி கொன்றனர். சுமார் 40 முறை, கத்தியால் அவருடைய சரீரத்தில் குத்தினர். மரிக்கும் தருவாயில் "இயேசுவே" என்று சொல்லிக் கொண்டே தன் ஜீவனை விட்டார். இவருடைய மரணத்திற்குப் பின்பு அந்தப் பகுதியிலுள்ள அநேகர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். இப்படியாக மத்தியப் பிரதேச பகுதியில் சுவிசேஷ ஊழியம் ஆங்காங்கே பரவத் தொடங்கியது.
இன்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தீண்டாமை என்னும் கொடிதான நோய் காணப்படுகிறது. உயர்ஜாதி என்று சொல்லக்கூடியவர்கள் பழங்குடி இன மக்களை மிகவும் துன்பப்படுத்துகின்றனர். இன்றும் ஆண்டவரை அறியாத கோடிக்கணக்கான ஜனங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மத்தியப் பிரதேச ஜனங்களை சந்திப்பதற்கு நமது ஊழியமானது சிகோர் மாவட்டத்தில் முதல் அடியை எடுத்து வைக்க உள்ளது. இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது என்ற வசனத்தின்படி பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் உண்மையாய் விடுதலை தருகின்ற இயேசுவை அறிவிக்க முன் செல்வோம். இயேசுவானவர் கொடுக்கின்ற விடுதலையை மத்தியப் பிரதேச மக்கள் பெற்றுக் கொள்ளட்டும்.
- Mrs.சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு
மருத்துவமனைக்கு வாங்கப்பட வேண்டிய உபகரணங்கள் மற்றும் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள். .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864