Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01.08.2023
Share:

By Village Missionary Movement

Monday, 31-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 01.08.2023

 

உத்திரப்பிரதேசம் 

 

"வனாந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து புஷ்பத்தைப் போலச் செழிக்கும்" - ஏசாயா 35:1 

 

 சுவிசேஷ வாடையே இல்லாத மிகவும் வறட்சியான இந்திய மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்றாகும். ஒரு பின்கோடு ஒன்றிற்கு ஒரு கிறிஸ்தவரை பார்ப்பது மிகவும் அரிதாக காணப்பட்ட மாநிலம் இதுவாகும். நம் தேசத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 20% பேர் இங்கு உள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் சுவிசேஷம் அறிவிப்பதற்காக ஆண்டவர் தெரிந்து கொண்ட பாத்திரம் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்லி ஜோன்ஸ் என்பவராவார். 

 

அமெரிக்காவில் மேரிலாண்டின் பால்டிமோர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி ஜோன்ஸ் ஆவார். அமெரிக்க மெத்தடிஸ்ட் சபையில் உறுப்பினராக இருந்த இவர் 1907ஆம் ஆண்டு நீண்ட பிரயாணத்துக்கு பிறகு உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவிற்கு வந்தடைந்தார். அமெரிக்க மிஷனரி சங்கத்தின் மூலம் ஸ்டான்லி ஜோன்ஸ் ஆதரிக்கப்பட்டார். உத்திரபிரதேசத்தில் படிப்பறிவுள்ள மக்கள் மற்றும் மிகவும் தாழ்த்தப்பட்ட இனமக்கள் என அனைத்து பகுதிகளிலும் தமது ஊழியத்தை செய்து வந்தார். உத்திரபிரதேசத்தில் முதன்முறையாக கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையை ஸ்டான்லி தொடங்கி மக்களுக்கு சுவிசேஷ பணியை செய்தார். மேலும் அனேக இடங்களில் தெருக்களில் நின்று சுவிசேஷத்தை பிரசங்கித்தார். இவருடைய தொடர் முயற்சியில் ஆங்காங்கே அனேக நபர்கள் இரட்சிக்கப்பட்டனர். "தி கிரைஸ்ட் ஆப் த இந்தியன் ரோட்ஸ்" என்ற இவரது புத்தகம் படிப்பறிவுள்ள அனேக புறஜாதி மக்கள் மத்தியில் இயேசுவை அறிந்து கொள்வதற்கு இன்னும் உந்துதலாக காணப்பட்டது. இவருடைய ஊழியத்தில் நமது தேசத் தந்தையாகிய மகாத்மா காந்தியடிகளும் ஈர்க்கப்பட்டு இருந்தார். காந்தியடிகளுக்கு நல்ல நண்பராக ஸ்டான்லி ஜோன்ஸ் காணப்பட்டார்.

 

உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா உட்பட சில வடஇந்திய மாநிலங்களில் இவர் அலைந்து திரிந்து ஊழியம் செய்தார். கிறிஸ்தவ ஆசிரமம் ஒன்றை நிறுவி அதன்மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு சுவிசேஷத்தை அறிவித்தார். சுவிசேஷமற்ற வறண்ட உத்தரபிரதேசத்தில் ஸ்டான்லி ஜோன்ஸ் அவருடைய தீவிரப் பிரயாசமானது சற்று கிரியை செய்ய ஆரம்பித்தது. ஸ்டான்லி ஜோன்ஸ் அவர்கள் விதைத்த வேத வசனமானது துளிர்த்து இன்றைக்கு பலன் தரக்கூடியதாக காணப்படுகிறது. இன்று உத்தரப்பிரதேசத்தில் அநேக மிஷனரிகள் பணி செய்தாலும் அவர்கள் எல்லோருக்கும் முன்னோடியாக ஸ்டான்லி ஜோன்ஸ் அவரது பணியை நாம் யாவரும் மறக்கவே முடியாது. இந்த அருமையான தேவ மனிதருக்காக நாம் தேவனை துதிப்போம்.

- Bro. ஜேக்கப் சங்கர் 

 

ஜெபக்குறிப்பு: 

இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து வழிநடத்த ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al