By Village Missionary Movement
Monday, 31-Jul-2023இன்றைய தியானம்(Tamil) 31-07.2023
இரக்கம் செய்
"ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்;…" - நீதிமொழிகள் 19:17
ஒரு ஈஸ்டர் தின அதிகாலையில் தேவபக்தியான ஒருவர் ஆராதனைக்குச் சென்று கொண்டிருந்தார். வழியிலே ஒரு ஏழை மனிதன் சரியான ஆடையில்லாமல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். இக்காட்சியைப் பார்த்த இவரது உள்ளம் அசைக்கப்பட்டது. வேறு ஒரு டிரஸ் போய் எடுத்து வருவதற்குள் அவன் குளிரில் விறைத்து மரித்து விடுவானே என பயந்தார். உடனே தான் அணிந்திருந்த நீளமான கோட்டைக் கழற்றி அதை இரண்டாகக் கிழித்து ஒருபாதியை குளிரினிமித்தம் தான் போர்த்திக் கொண்டு மற்றொரு பாதியை அந்த ஏழை மனிதனுக்கு போர்த்தி விட்டு ஆலய ஆராதனைக்கு சென்று வந்தார். திடீரென்று அவரது கண்களுக்கு முன்னால் ஆண்டவர் ஒரு தரிசனம் கொடுத்தார். மகிமையின் தேவனாகக் காட்சியளித்த அவர் பாதி கோட்டை அணிந்திருந்தார். அதைப் பார்த்த அந்த மனிதன் நான் உதவி செய்தது இயேசுகிறிஸ்துவுக்கா என ஆச்சரியப்பட்டார். ஐயோ ஆண்டவர் என்று அறிந்திருந்தால் முழு கோட்டையும் கொடுத்திருப்பேனே என்று எண்ணினார்.
இரக்க குணத்தோடு பிறர் நலன் கருதி செயல்படுபவர்கள் குறைந்து கொண்டுவரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிறருக்கு உதவுவதால் தங்களுக்கு வரும் சங்கடங்களை மக்கள் விரும்புவதில்லை. நமக்குச் சங்கடங்கள் ஏற்படாமல் நாம் பிறருக்கு உதவமுடியாது. இன்றைய வேதபகுதியிலே மிகுந்த உபத்திரவத்தில் இருந்த போதிலும் கொடுத்த மக்கெதோனியா சபையாரைக் குறித்து வாசித்தோம். ஆம், கிறிஸ்துநாதர் பானம் பண்ணின பாத்திரத்தில் நாம் பானம் பண்ணினாலொழிய நாம் பிறருக்கு ஏற்ற காலத்தில் உதவுவதால் உண்டாகும் பெரு மகிழ்ச்சியைப் பெற முடியாது.
பிரியமானவர்களே! நம்முடைய குறைச்சலிலும் பிறருக்கு உதவும் மனம் நம்மிடம் உண்டா? பிறருக்கு கொடுப்பதால் நமக்கு கஷ்டம் வந்தாலும் அதை சகித்துக் கொள்கிறோமா? நம்முடைய கைகள் காயப்படும் வரை பிறருக்கு கொடுக்கிறோமா?
- Mrs.ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு
நமது பணிதளங்களுக்கு இருசக்கர வாகனங்கள் அத்தியாவசிய தேவையாக உள்ளது. உதவி செய்யும் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864