Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 29-07.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 30-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 29-07.2023 (Kids Special)

 

தேனீக்கள் போல...  

 

"…தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது" - சங்கீதம் 19:10

 

விமல்-க்கு வெள்ளிக்கிழமை மாலை வந்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஏன் தெரியுமா? சனி, ஞாயிறு விடுமுறைக்கு பக்கத்து கிராமத்தில் இருக்கின்ற தாத்தா வீட்டிற்கு செல்வதென்றால் ரொம்ப பிடிக்கும். உங்களுக்கும் தாத்தா, பாட்டி வீடு பிடிக்குமா? சூப்பர் . . . விமல், தாத்தா வீட்டில் இருக்கின்ற சீசர் நாய்க்குட்டியுடன் கூட விளையாடுவதில் நேரம் போவதே தெரியாது. சீசரும் வாலை ஆட்டிக் கொண்டே லொள் . . . லொள் . . . என்று குரைத்து தன் அன்பை காட்டும். தாத்தா காலையிலேயே சீக்கிரம் எழும்பி ஜெபம் செய்து, வேதம் வாசித்து விட்டுத்தான் தன் வீட்டிலுள்ள இரண்டு மாடுகளை மேய்க்கப் போவார். விமல் நீயும் எழும்பி ஜெபம் பண்ணிட்டு, பைபிள் வாசி தம்பி என்று சொன்னார். "தாத்தா . . . போங்க தாத்தா இன்றைக்கு Leave தானே என்னை தூங்க விடுங்களேன்." கொஞ்ச நேரத்தில் பாட்டியும் எழும்பி ஆண்டவரை தேட ஆரம்பித்தார்கள்.

 

தூங்கி எழுந்த விமல் வேதம் வாசித்துக் கொண்டிருந்த பாட்டியை பார்த்ததும் ஆச்சரியம் அடைந்தவனாய் என்ன இது, தாத்தாவும், பாட்டியும் இப்படி போட்டி போட்டு பைபிள் வாசிக்கிறாங்க. அதில் என்னதான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். தாத்தாவும் மாடு மேய்த்து விட்டு வீட்டிற்கு வந்தார். மாட்டுக்குத் தேவையான வைக்கோல், தண்ணீர் எல்லாம் வைத்துவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டார். சீசரோடு விளையாடிக் கொண்டிருந்த விமல் மரத்தை சுற்றி, சுற்றி வந்த தேனீக்களை பார்த்தான். பெரிய தேன்கூடு ஒன்று இருந்தது. விமலுக்கு தேன் சாப்பிட ஆசை வந்து விட்டது. தாத்தா இங்கே வாங்க எவ்வளவு பெரிய தேன் கூடு வந்து பாருங்க என்று கூப்பிட்டான். என்ன குட்டீஸ் நீங்க தேன் சாப்பிட்டிருக்கீங்களா? சாப்பிட சாப்பிட சுவையா இருக்கும்ல. தாத்தாவும் கவனமா தேனை எடுக்க வேண்டிய விதமா எடுத்து விட்டார். பாட்டியும் வந்தாங்க தேனை டேஸ்ட் பார்த்துட்டு சொன்னாங்க. இந்த தேனை விட வேத வசனம் ரொம்ப டேஸ்டா இருக்கும் விமல். அதனால தான் நானும், தாத்தாவும் காலையிலேயே வேதம் வாசித்து விடுவோம் ... என்று சொன்னதும் ... விமல் சொன்னான் சரி பாட்டி நானும் இனிமேல் வேதம் வாசிக்க முயற்சி செய்கிறேன். எனக்கும் சொல்லி தாங்க என்றதும் தாத்தா, பாட்டி முகத்தில் வந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

 

குட்டி செல்லங்களே! தேனை விட இனிமையான வேதம் நம் கையில் இருக்கும்போது வாசிக்காமல் இருக்கலாமா? நீங்களும் தினமும் வேதத்தை வாசித்து இயேசப்பாவை ருசித்து பாருங்க. All the Best.

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al