By Village Missionary Movement
Saturday, 29-Jul-2023இன்றைய தியானம்(Tamil) 29-07.2023
பண ஆசை
"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;…" - 1 தீமோ 6:10
உலக அதிசயங்களில் ஒன்று சீனப்பெருஞ்சுவர்! 4500 மைல் நீளமும் 35 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்டதுதான் இந்த பெருஞ்சுவர். மிகவும் பாதுகாப்பானதாகவும், உலகமே ஆச்சரியப்படக்கூடிய அளவிற்கு பெருமை வாய்ந்ததாகவும் கட்டப்பட்டது. உலகில் எந்த ஒரு நாடும் இவ்வளவு பிரம்மாண்டமான சுவரை கட்டியதே இல்லை. இயற்கையின் நடுவே மலைகளின் மேல் கட்டப்பட்ட இந்த சுவரை வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று பல நாடுகளிலிருந்தும் கூட்டம் கூட்டமாக மக்கள் வருவதுண்டு. இத்தனை சிறப்புகளையும் கொண்ட இந்த சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டதின் நோக்கம் என்ன தெரியுமா? தன் நாட்டிற்குள் எதிரி நாட்டு படைகள் நுழைந்து விடக்கூடாது என்பதுதான். ஆனால் அதையும் தாண்டி பார்பேரியன் எனப்படும் காட்டுமிராண்டிகள் மிக எளிதாக உள்ளே நுழைந்து விட்டனர். எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்? அந்த சுவரை தாண்டியோ அல்லது இடித்தோ, 4500 மைல் சுற்றியோ உள்ளே நுழையவில்லை. கோட்டையை காவல் காக்கிற காவலனுக்கு லஞ்சம் கொடுத்து, வாசல் வழியாகவே சீனாவின் மீது படையெடுத்தனர். ஒரு சின்ன பொருளாசை பெரிய தோல்விக்கு காரணமாயின. வேலியே பயிரை மேய்ந்த கதையை போல கூட இருந்த காவலாளியின் பண ஆசைதான் இதற்கு காரணம்.
2 இராஜாக்கள் 5 ம் அதிகாரத்தில் தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசியின் மூலம் தேவன் நமக்கு கற்று தரும் காரியம் என்ன என்பதை பார்ப்போம். எலியாவிற்கு பின் எலிசா தன் முழு கவனத்தையும் செலுத்தி இரு மடங்கு வல்லமையுடைய தீர்க்கதரிசியானான். ஆனால் எலிசாவிறகு பின் அவன் ஸ்தானத்திற்கு வரவேண்டிய கேயாசியோ தன் ஆவியை அடக்காமல் பொருளாசையை பின்பற்றி கடைசியில் நாகமானின் குஷ்டத்தை பெற்றான். அவன் மாத்திரமல்ல அவன் சந்ததிக்கும் சாபத்தை வரவழைத்து கொண்டான். உயர்வுக்காக அழைக்கப்பட்டவன் தாழ்வடைந்தான். ஆவியை அடக்காமல் மதில் இடிந்த பட்டணம் போல் மாறிவிட்டான்.
நாமும் கூட நம் மனதின் அரையைக் கட்டி தெளிந்த புத்தி உள்ளவர்களாய் இருக்க வேண்டும். (1பேதுரு 1:13) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. தேவனுக்கு பிரியமில்லாத சின்ன, சின்ன பொருளாசைகள் நம் வாழ்வின் பெரிய ஆசீர்வாதத்திற்கு தடையாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. பண ஆசையை விட்டுவிட்டு போதும் என்கிற மனதோடு வாழ பழகிக் கொள்வோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.
- Mrs. ஜெயந்தி பாக்கியநாதன்
ஜெபக்குறிப்பு
நமது ஊழியத்தை ஜெபத்தாலும், காணிக்கையினாலும் தாங்கும் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள் .
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864