By Village Missionary Movement
Thursday, 27-Jul-2023இன்றைய தியானம்(Tamil) 27-07.2023
கொடுங்கள்
"…உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" - 2 கொரி 9:7
ஒரு வயதானவர் மிகுந்த பசியினால் ஒரு ஹோட்டலுக்குள் சாப்பிட சென்றார். அப்போது வந்த சப்ளையரிடம் ஒரு சாப்பாடு எவ்வளவு என்றார்? 50 ரூபாய் என்றார். உடனே முதியவர் தன் பர்சில் உள்ள ரூபாயை எண்ணி விட்டு குறைவான விலையில் சாப்பாடு இல்லையா? என்றார். உடனே சப்ளையர் தயிர் இல்லாமல் சாப்பிட்டால் 45 ரூபாய் என்றார். முதியவர் 45 ரூபாய்க்கு தயிர் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு 50 ரூபாயை சப்ளையரிடம் கொடுத்தார். அவர், தயிரோடு சாப்பிட்டிருக்கலாமே 50 ரூபாய் வைத்திருக்கிறீர்களே என்றார். முதியவர் என்னை கவனித்த உனக்குக் கொடுப்பதற்கு ரூபாய் இல்லை அதனால்தான் என சிரித்து விட்டு சென்றார். சப்ளையர் இந்த 5 ரூபாய் விசேஷமானது என சொல்லி அதை தன் உள் பையில் போட்டுக் கொண்டார்.
இயேசுகிறிஸ்து இந்த பூமியில் உலாவிய நாட்களில் தேவாலயத்தில் காணிக்கைப் பெட்டி முன் அமர்ந்திருந்து ஜனங்கள் காணிக்கை போடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சீஷர்களை அழைத்து ஒருவருடைய காணிக்கையை மட்டும் பாராட்டினார். அது ஏழை விதவை போட்ட இரண்டு காசு! மனிதர்கள் அதை அற்பமாக எண்ணியிருந்திருக்கலாம். பலர் அதிகமாய் போட்டனர். அதனால் இரண்டு காசின் மதிப்பு குறைவாய் இருந்திருக்கலாம். ஆனால் தேவன் பார்வையில் இந்த இரண்டு காசு அதிகமாய் பாராட்டைப் பெற்றது! காரணம் “அந்த காணிக்கை தன்னை ஒடுக்கி போடப்பட்டதுவே” ஆகும். உலகில் “தனக்கு மிஞ்சி தானம்” என் கூறுவார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து உன்னை ஒடுக்கி செய்வது உனக்குரியதை கொடுத்தலே சிறந்தது என்பார். ஏனெனில் கொடுப்பது அன்பின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும். கட்டாயத்திற்காகவோ அல்லது பெயர், புகழுக்காகவோ இருக்கக் கூடாது.
மக்கெதோனியா சபையார் உபத்திரவம், தரித்திரம் இவற்றின் மத்தியில் பரிபூரண சந்தோஷத்தினால் “மிகுந்த” உதாரத்துவமாய்க் கொடுத்தனர். இப்போதெல்லாம் சேமித்து வைப்பதைப் பற்றி தான் சிந்திக்கிறோம். பிறரது சூழ்நிலையை பார்ப்பது அவர்களுக்கு உதவுவது குறைந்து விட்டது. அன்பின் வெளிப்பாடாய் எங்கெல்லாம் கொடுக்கப்பட்டதோ அங்கெல்லாம் தேவனின் கவனம் ஈர்க்கப்பட்டு பாராட்டினார். நளதம் தைலம் பூசிய மரியாள் இயன்றதைச் செய்தாள் என்கிறார். பாவியான ஸ்திரீ கண்ணீரால் நனைத்து தலைமயிரால் துடைத்து பரிமளதைலம் பூசிய போது “இவள் மிகவும் அன்பு கூர்ந்தாள்” எனப் பாராட்டுகிறார்.
இதை வாசிக்கும் பிரியமானவர்களே! தேவனின் கவனத்தை ஈர்க்க பாராட்டைப் பெற அன்பினால் நிறைந்து உதாரத்துவமாய் கொடுங்கள். உங்களை ஒடுக்கி கொடுங்கள் அதைப் பார்த்து நிரம்பி வழியச் செய்வார் தேவன். உங்களிடம் பெறுகிறவர்களும் ஆசீர்வதிக்கப்படுவர்.
- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
பரிந்து பேசி ஜெபிக்கும் எஸ்தர் போன்ற பெண்கள் பணித்தளங்களில் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864