Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26-07.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 25-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 26-07.2023

 

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்து 

 

"ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்” - சங்கீதம்50:23 

 

அமெரிக்காவில் ஒருவருக்கு அவர் செய்த குற்றத்திற்காக 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது மனைவி பிள்ளைகள் வருடக்கணக்காக மிகவும் கஷ்டப்பட்டனர். இதினிமித்தம் எரிச்சலும் கோபமுமடைந்த அவர், தன் கோபத்தையும், வெறுப்பையும் தன்னுடன் உள்ளவர்களிடம் காட்டினார். ஒரு நாள் தன் அறையில் உள்ள வேதத்தை எடுத்து படித்தார். படிக்கப் படிக்க ஒரு சமாதானம் அவரை நிறைத்தது. கிறிஸ்து ஒரு பாவமும் செய்யாமல் எனக்காக பாடுபட்டு மரித்தாரே என ஏற்றுக் கொண்டார். அன்று முதல் தனக்கு வர இருந்த தண்டனையைத் தேவன் ஏற்றாரே என நன்றி செலுத்த ஆரம்பித்தார். சில நாட்கள் சென்றன. அவரது மனைவிக்கு கேன்சர் என கேள்விப்பட்டார். அப்போதும் மனம் தளராமல் நன்றி செலுத்தினார். அவர்கள் மனைவி குணமடைந்து அவரைப் பார்க்க வந்தார். என்ன அற்புதம் பாருங்கள்.

 

நாம் முறுமுறுக்கும்போது சாத்தானுக்கு இடம் கொடுத்து விடுகிறோம். ஸ்தோத்தரிக்கும்போது கர்த்தருக்கு முதலிடம் கொடுத்து அவரை உயர்த்துகிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் கடவுள் மோசேயை வைத்து வழிநடத்தி வந்தபோது அவர்கள் வழியில் கஷ்டங்கள் படும்போது முறுமுறுத்து, குறை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அடிமைத்தனத்திலிருந்து தேவன் அவர்களை விடுவித்ததற்கு தேவனை மகிமைப்படுத்தவில்லை. இதனால் கானானை இழந்தனர். அவர்களது பிள்ளைகளே அதனை சுதந்தரித்தனர். மாறாக துதிக்கும் போது தேவனே இறங்கி வருகிறார். இஸ்ரவேல் துதித்து ஆரவாரித்த போது எரிகோ தகர்ந்தது. முறுமுறுத்தபோது அழிவும் தேவ கோபமும் வந்தது. ஆம், நாம் துதிக்கும் போது தேவனுக்கும், முறுமுறுக்கும் போது சாத்தானுக்கும் முதலிடம் கொடுக்கிறோம். நாம் யாருக்கு முதலிடம் கொடுக்கிறோமோ அதைப் பொறுத்தே நம் வாழ்வும் அமையும்.

 

இதை வாசிக்கும் அன்பரே, நாமும் பாடுகள், கஷ்டங்கள் மத்தியில் ஸ்தோத்தரிக்க முடியாமல் முறுமுறுத்துக் கொண்டோ, குறை சொல்லிக் கொண்டோ இருக்க வேண்டாம். தேவன் நம் வாழ்வில் செய்யும் காரியங்களை மறவாமல் நன்றியுள்ளவர்களாய் இருந்தால் ஸ்தோத்திரம் தானாக வரும். தடைகளைத் தகர்க்கும் துதி நம் வாழ்வை ஜெயமாய் மாற்றும். துதி நம் நாவில் எப்போதும் இருக்கட்டும். துதி இருந்தால் பரலோகம் உங்களிடம் வரும். உங்கள் இடம் அசையும். சூழ்நிலை மாறும். இஷ்டப்பட்டு துதியுங்கள். அது உங்கள் பழக்கமாகிவிடும்.

- Mrs. ஜெனிட்டா அபிராமி 

 

ஜெபக்குறிப்பு 

நமது வளாகத்தில் டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al