Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24-07.2023
Share:

By Village Missionary Movement

Sunday, 23-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 24-07.2023

 

போராடு 

 

"…நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடு கூடப் போராட வேண்டுமென்று… உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்" - ரோமர் 15:32 

 

செருப்பு தைக்கும் தொழிலாளியால் உலகத்தை மாற்ற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்தான் வில்லியம் கேரி! உலகத்தை செப்பனிட பிறந்தவர் என்று கூட சொல்லலாம். 1793 ம் ஆண்டு கல்கத்தாவிற்கு காலடி எடுத்து வைத்த வில்லியம்கேரி ஒருமுறை கூட தன் நாட்டிற்கு திரும்ப சென்றதே இல்லை. 40 ஆண்டுகள் அரும்பாடுபட்டு ஆண்டவரின் பணியை செவ்வனே செய்து முடித்தார். பிரச்சனைகளும், போராட்டங்களும் இவருடைய வாழ்வை பின்னிப் பிணைத்தது. இவருடைய மனைவி மூளை கோளாறினால் பாதிக்கப்பட்டார். குழந்தையும் சுகவீனத்தினால் மரித்துப் போனது. ஆனாலும் எல்லாவித சோதனைகளையும் சாதனையாக மாற்றினார் வில்லியம்கேரி. இவரால் ஆரம்பிக்கப்பட்ட செராம்பூர் பல்கலைக்கழகம் ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கியுள்ளது. இந்த பல்கலைக்கழகம் இன்றளவும் இவரது புகழை பறைசாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. இவர் தன்னுடைய வாழ்நாளில் எல்லாவிதமான பாடுகளையும் ஆவியானவரின் உதவியோடு போராடிதான் மேற்கொண்டார்.

 

வேதத்திலும் இப்படி போராடி ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டவர் யாக்கோபு. இவர் தன் மாமனாகிய லாபான் வீட்டில் சம்பாதித்து திரும்பி வரும் வழியில் தனித்திருந்தான். அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி அவனை மேற்கொள்ளாததைக் கண்டு அவனுடைய தொடைச்சந்தை தொட்டார். யாக்கோபு தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டதை நாம் வாசிக்கிறோம்.

 

இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! சபிக்கப்பட்ட பூமியில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் எளிதாக எதையும் யாரிடமும் இருந்து பெற்று விட முடியாது. யாக்கோபு தனித்து இருந்து போராடிதான் தேவனிடமிருந்து தேவ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டான். யாக்கோபு மாத்திரம் இல்லை இன்னும் வேதத்தில் பலர் தங்களுடைய கிருபை வரங்களுக்காக போராடி பெற்றதை நாம் அறிவோம். நாம் ஒவ்வொரு நாளுக்குரிய கிருபைகளை தேவனிடம் போராடி பெற்றுக் கொள்ளுவோம். இயேசுவும் போராடி ஜெபித்ததை நாம் வாசிக்கிறோம். நாம் நமக்கு தேவையான எல்லாவிதமான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள நிச்சயம் போராட வேண்டும். தேவனிடம் விடாமல் தொடர்ந்து போராடுவோம்! வெற்றி நிச்சயம் காண்போம்!

- Mrs.சக்தி சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு  

பிலிப் காஸ்பல் டீம் ஊழியங்கள் மூலம் புதிய கிராமங்கள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking