By Village Missionary Movement
Sunday, 23-Jul-2023இன்றைய தியானம்(Tamil) 23-07.2023 (Kids Special)
பிறந்தநாள் பரிசு
"இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” - மத்தேயு 5:7
ஹலோ குட்டீஸ், உங்களுக்கு பிறந்தநாள் வந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும்தானே! புது டிரஸ், கேக், சாக்லேட் இதையெல்லாம் வாங்கி சந்தோஷமா கொண்டாடுவீங்க தானே.
இதுபோலத்தான் ஒரு ராஜாவுக்கு பிறந்தநாள் வந்தது. தனது பிறந்தநாளன்று யாரையாவது ஒரு கைதியை விடுவிக்க வேண்டுமென்று தனது மனதில் தீர்மானித்தார். ஆனால் யாரை விடுவிப்பது என்று ஒரே குழப்பம். மந்திரி ஒரு ஆலோசனை கொடுத்தார். ராஜாவுக்கு அது திருப்தியாக இருந்தது. அதன்படி சிறைக்கைதிகள் எல்லோரையும் ராஜா விடுவிக்கப் போகிறார் அதற்காக இந்த பெட்டியில் ஆளுக்கு ஒரு முத்திரை சீட்டு கொண்டு வந்திருக்கிறேன். மாலையில் இந்த முத்திரை சீட்டை காண்பித்து நீங்கள் விடுதலை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவ்விடத்தைக் கடந்தார்.
மந்திரி சொன்னதுபோல எல்லா கைதிகளும் முத்திரை சீட்டோடு வந்தார்கள். But ஒருவர் மட்டும் வரவில்லை. ராஜா அவனை அழைத்து வாருங்கள் என்றார். உடனே அந்த கைதியை அழைத்து வந்து ராஜா முன்பு நிறுத்தினார்கள். அவனைக்கண்ட ராஜா உன் முத்திரைச்சீட்டு எங்கே என்றார். உடனே கைதி ராஜாவிடம் மந்திரியார் முத்திரை சீட்டு கொண்டுவரும் போது ஒன்று குறைவாக இருந்தது. அது அதோ அங்கே நிற்கிறாரே அவருக்கு இல்லாதிருந்தது. அவருக்கு குடும்பம் இருக்கிறது மற்றும் வயதான பெற்றோரும் இருக்கிறார்கள். அவருடைய எல்லா விவரத்தையும் என்னிடம் சொல்லியிருக்கிறார். எனவேதான் எனது சீட்டை அவரிடம் கொடுத்துவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறினான். இதைக்கேட்ட ராஜா சபாஷ் நீயே சிறந்தவன் இவ்வளவு இரக்கமுள்ள நீ சிறையில் இருக்கக்கூடாது. ஆகவே உன்னை விடுவிக்கப் போகிறேன். உனது நல்ல குணத்திற்கு இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமென்று எனது உள்ளம் சொல்லுகிறது. உனது ஆசையை சொல் என்று கூறிக்கொண்டே சிம்மாசனத்தில் அமர்ந்தார். கைதி ராஜாவை நோக்கி எனக்கு ஏதாவது செய்ய நினைத்தால் என்னை விடுதலையாக்காமல் அதோ அவரை விடுதலை செய்யுங்கள். அதுதான் நீங்கள் எனக்கு தருகிற பரிசாக இருக்கும் என்றான். இராஜாவின் இருதயம் பூரிப்படைந்தது. உடனே ராஜா ஓகே, அவனை விடுதலை செய்கிறேன். ஆனால் உன்னை இந்த சிறையிலிருந்து விடுவிக்க முடியாது என்றார். இதைக்கேட்ட எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பின்பு ராஜா உன்னை சிறைக்கைதியாய் அல்ல சிறைக்கு அதிகாரியாக உயர்த்துகிறேன். நீ சிறைக்கு அதிகாரியாக இருந்தால் அநேகர் திருந்திவிடுவார்கள் என்று சொல்லி தனது பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.
குட்டி தம்பி, தங்கச்சி இப்படிப்பட்ட இரக்க குணத்தைத்தான் இயேசப்பா உன்னிடம் எதிர்பார்க்கிறார். நீயும் அந்த அண்ணனை போல மாறுவாயா?
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864