Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21-07.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 20-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 21-07.2023

 

மதிப்பெண் எவ்வளவு? 

 

"...நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் 

ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" - யோவான்14:6

 

"பரலோகத்தின் வழி இடுக்கமானது" என உணர்த்தும் கற்பனை கதை. ஒரு மனிதன் மரித்து பரலோகத்தின் வாசலுக்கு சென்றான். அங்கு பேதுருவை வாசலில் கண்டான். பேதுரு அவனிடம் "100 மதிப்பெண் பெற்றால் பரலோகத்திற்கு உள்ளே வரலாம் என்றார்" அம் மனிதனை பார்த்து, "நீ செய்த நன்மைகளை சொல்லு, நான் மதிப்பெண் இடுகிறேன்" என்றார் பேதுரு. அம்மனிதன் சந்தோஷத்துடன் "நான் ஒரே மனைவியை உடையவன், 50 வருடம் அவளுடன் வாழ்ந்தேன். மனதளவில் கூட அவளுக்கு துரோகம் செய்யவில்லை" என்றான். பேதுரு, "ஓ மிகவும் நல்லது இதற்கு 3 மதிப்பெண்கள்" என்றார். மனிதன் தொடர்ந்தான், "வாரம் தவறாமல் ஆலயம் செல்வேன், தசமபாகம் சரியாய் கொடுத்தேன்" என்றான். பேதுரு பாராட்டி, "மிக நல்லது மீண்டும் 3 மதிப்பெண்" என்றார். அம்மனிதன் "முதியோர்களுக்கு உதவி செய்தேன்" என்றார். பேதுரு மகிழ்வுடன் 3 மதிப்பெண் என்றார். அம்மனிதன் அழுதே விட்டான். நான் செய்த நன்மைகளுக்கு இவ்வளவுதானா மதிப்பெண் என்று கதறியவாறே "நான் என் கிரியைகள் மூலம் பரலோகத்திற்கு செல்லவே முடியாது, கர்த்தருடைய கிருபையினால் மாத்திரமே நான் பரலோகம் செல்ல முடியும்" என கதறினான். அதை கேட்ட பேதுரு இப்பொழுது நீ உள்ளே செல்லலாம் என்றார்.

 

அப். பேதுரு யூதர்களுக்கு மாத்திரம் இரட்சிப்பு என்று எண்ணி ஊழியம் செய்து கொண்டிருந்தார். ஆனால் யூதரல்லாத கொர்நேலியுவை இயேசு அறிமுகப்படுத்துகிறார். இத்தாலியா பட்டணத்தில் நூற்றுக்கு அதிபதியான அவர் வீட்டார் அனைவரோடும் தேவனுக்கு பயந்தவன், ஜனங்களுக்கு மிகுந்த தானதர்மம் செய்பவன், தேவனை நோக்கி ஜெபம் செய்பவன். பெரிய பதவியில் இருந்தாலும் பக்தி நிறைந்திருந்தாலும், மிகுதியாய் ஜெபம் செய்தாலும், மிகுந்த தானதர்மம் பண்ணினாலும் அவருக்கு இரட்சிப்பு தேவை என்பதை பேதுரு மூலம் உணர்த்துகிறார்.

 

ஆம், எனக்கன்பானவர்களே! எத்தனை அதிகமாய் நாம் நற்கிரியைகள் செய்தாலும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு பாவத்திலிருந்து விடுதலை பெற்று சாட்சியான ஜீவியம் இல்லை என்றால் நித்தியம் என்பது எட்டாகனியே! இரட்சிப்பின் அனுபவத்தோடு நற்கிரியை செய்பவர்களுக்கு பிரயாசத்தின் பலனை தாம் மகிமை பொருந்தியவராய் வரும்போது தருவேன் என்கிறார். இயேசுகிறிஸ்து நம்முடைய அன்பின் பிரயாசங்களை மறப்பதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே! கிறிஸ்துவுக்குள்ளாக நம் நற்கிரியைகள் பலனை கொண்டுவரும், முடிவில் நித்திய ஜீவனும் உண்டு. உங்கள் ஓட்டமும் கிறிஸ்துவுக்குள்ளா? அல்லது வெளியிலா? சிந்திப்போம்!!

- Sis. மஞ்சுளா 

 

ஜெபக்குறிப்பு: 

கைப்பிரதி ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படும் நபர்கள் மனந்திரும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al