By Village Missionary Movement
Monday, 17-Jul-2023இன்றைய தியானம்(Tamil) 18-07.2023
பல்லியால் முடியும் போது ..
"…உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக…" - மத்தேயு 19:19
இது ஜப்பானில் நடந்த உண்மை கதை. அங்குள்ள ஒருவர் தன்னுடைய வீட்டை புதுப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்தெடுத்துக் கொண்டிருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும். இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். அவர் வீட்டு சுவற்றை பெயர்க்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதைப் பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தபோதுதான் கவனித்தார், அது வெளிப்பகுதியில் இருந்து ஆணி அடிக்கும் போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும், எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிரோடு இருக்கிறது, இதை நாம் கண்டுபிடித்தாக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்காணித்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டார். அந்த பல்லி தன் வாயிலிருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்ட பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார். அவருக்கு தூக்கி வாரி போட்டது. 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கியிருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்துள்ளது. ஒரு பல்லி தன் இனத்தை சார்ந்த ஒரு உயிருக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளதை கண்டு வியப்படைந்தார்.
இன்றும் நம்மை சுற்றியுள்ள மக்களின் பிரச்சனைகளில், வறுமையில் சிக்கி வாழ வழி தெரியாமல் இருக்கும் எத்தனையோ பேர் உண்டே! ஏன் நம் உறவினர்கள் கூட உண்டே! அவர்களின் எல்லா சூழ்நிலையும் அறிந்தும், கண்டும் காணாமல், உதவ முன் வராமல் இருக்கிறோம். நன்மை செய்ய நமக்கு திராணி இருக்கும் போது அதை செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இருப்பது பாவம் என்று வேதம் நமக்குச் சொல்கிறது.
ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா "உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக" என்று வேதமும் நமக்கு ஆலோசனை தருகிறது. வசனத்திற்கு கீழ்ப்படிவோம், சாட்சியாய் வாழ்வோம்.
- Mrs.ஜெயந்தி பாக்கியநாதன்.
ஜெபக்குறிப்பு:
நமது வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864