Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17-07.2023
Share:

By Village Missionary Movement

Monday, 17-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 17-07.2023

 

குற்றம் நம்மேல் சுமரும்! 

 

"…சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ” - 1 கொரி 9:16 

 

ஜெர்மனி தேசத்தில் சர்வாதிகாரராக ஆட்சி புரிந்த ஹிட்லரை குறித்து நாம் அனைவரும் அறிவோம். யூதர்களை கொன்று குவித்து, ஒரு யூதன் கூட இராதபடி அழித்துவிட கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டவன் அவன். யூதர்களைப் பிடித்து மிகவும் கொடுமையாய் நடத்தி, "செல்" எனப்படுகிற "கான்சன்ட்ரேஷன் கேம்பில்" வைத்து, ஆண்களையும் பெண்களையும் அடித்து காயப்படுத்தி தலைகீழாய் தொங்கவிட்டு கடைசியில் கொன்று விடுவான். அந்த ஹிட்லருக்கு ஆன்ட்ரு என்னும் பெயர் கொண்ட கிறிஸ்தவர் ஒருவர் உயர் அதிகாரியாக ஹிட்லருக்கு மிக நெருக்கமாக பணிபுரிந்து வந்தார். அவர் ஒருநாளும் ஹிட்லருக்கு இயேசுவை குறித்து சொன்னதே கிடையாது. சொல்லவும் மிகவும் பயந்தார். 

 

இந்த நிலையில், ஜெர்மனிக்கு விரோதமாக பல நாடுகள் கூடி போர் தொடுத்தபொழுது, ஹிட்லர் நாட்டை விட்டு விமானம் மூலமாய் தப்பி ஓடி மரித்துப் போனான். அவரது நண்பனான ஆன்ட்ரு, தன் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்று தன் சொந்த கிராமத்துக்கு சென்று தன் காலத்தை கழித்து வந்தார். ஒருநாள் மாலை ஓய்வு நாற்காலியில் அமர்ந்து வேதத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு பின்னால் ஹிட்லரின் பூட்ஸ் காலடி சத்தம் கேட்டது. அவர் அதைக் கேட்ட பொழுது நடுநடுங்கிப் போனார். அந்த சத்தம் இவருக்கு மிக அருகில் வந்து நின்றது. பின்பு அந்த உருவம், "ஆன்ட்ரு, நீ என்னை மோசம் போக்கிவிட்டாய். நீ மட்டும் என்னிடம் நீ ஆராதித்து வந்த இயேசுவை குறித்து ஒருமுறை கூட சொல்லவில்லையே" என்று கதறி அழுதபடியே மறைந்து போனது. அன்று ஆன்ட்ரு தான் செய்த தவறை நினைத்து மிகவும் வேதனைப்பட்டார்.   

 

எலிசா தீர்க்கதரிசியின் நாட்களில் இஸ்ரவேல் தேசத்தில் மிகுந்த பஞ்சம் உண்டாயிற்று. ஜனங்கள் வெளியே செல்ல முடியாதபடிக்கு அவர்களை சீரியா ராணுவம் முற்றுகையிட்டிருந்தது. பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தபடியினால் ஊருக்கு வெளியே இருந்த 4 குஷ்டரோகிகளுக்கு உணவளிக்க ஒருவரும் முன்வராததினால், சீரியருடைய இராணுவத்திற்குப் போக ஒருமித்தார்கள். அப்பொழுதுதான் அங்குள்ள சூழ்நிலை அவர்களை பிரமிக்க செய்தது. இவர்களுக்கு முன்பாக சீரியருடைய ராணுவம் தங்கள் பாளயத்தை விட்டு ஏற்கனவே ஓடிவிட்டார்கள். நான்கு குஷ்டரோகிகளும் வயிறார உண்ட பின் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி நாம் செய்கிறது நியாயமல்ல. இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள். நாம் மௌனமாக இருந்தால் குற்றம் நம்மேல் சுமரும் என்கின்றனர்.(2இராஜாக்கள் 7:9)

 

நீங்களும் நானும் கூட இயேசு நம்மை சந்தித்து, இரட்சித்து, காப்பாற்றி வழிநடத்தி வருகிறதையும் அவர் நம்மை மீட்க வந்த ஜீவனுள்ள இரட்சகர் என்பதையும் பிறருக்கு சொல்ல வேண்டும். எனக்கு வசதியான காலம் வரும்வரை பொறுத்திருந்து செயல்படுவேன் என்று சொல்லி நாம் செயல்படாதிருந்தால் குற்றம் நம் மேல் சுமரும். சிந்திப்போம்! உடனே செயல்படுவோம்!! ஆமென்.

- Bro . பாக்கியநாதன்.

 

ஜெபக்குறிப்பு  

பசித்தோர்க்கு உணவளிக்கும் திட்டம் மூலம் சந்திக்கப்படும் நபர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al