By Village Missionary Movement
Sunday, 16-Jul-2023இன்றைய தியானம்(Tamil) 16-07.2023 (Kids Special)
சர்க்கரை மூட்டை
"…மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்" - கலாத்தியர் 6:7
ஒரு கிராமத்தில் முத்தையன் என்ற சர்க்கரை வியாபாரி ஒருவர் இருந்தார். இவர் பக்கத்து ஊருக்கு சென்று சர்க்கரையை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து பணம் சம்பாதித்தார். இவருக்கு உதவியாக கழுதை ஒன்று இருந்தது. தினமும் அந்த கழுதை சர்க்கரை மூட்டையை கஷ்டப்பட்டு சுமந்து வரும். வரும் வழியில் ஆற்றைக் கடந்து வரவேண்டும். ஒருநாள் இப்படி ஆற்றை கடக்கும் போது கால் மடங்கி கழுதை ஆற்றில் விழுந்துவிட்டது. நனைந்த சர்க்கரை தண்ணீரில் கரைந்ததால் சுமை சுமக்க ஈஸியாக இருந்தது. இதனால் கழுதை நினைத்தது, "தினமும் இந்த ஆற்று தண்ணீரில் விழுந்து விட வேண்டியதுதான்" என்று. அதேபோல் ஒவ்வொருநாளும் ஆற்றைக் கடக்கும் போது தவறி விழுவதைப் போல் விழுந்து சர்க்கரையை நனைத்து விட்டு ஈஸியாக நடந்து போய்விடும் கழுதை. இதையெல்லாம் கவனித்துக் கொண்டேயிருந்த முத்தையன் இந்த கழுதைக்கு எப்படியாவது பாடம் புகட்ட வேண்டுமென்று நினைத்தார்.
ஒருநாள் சர்க்கரைக்கு பதிலாக பஞ்சு மூட்டையை வாங்கி கழுதையை சுமக்க வைத்தார். ஹய்யா ஜாலி ரொம்ப ஈஸியாக இருக்கிறதே என்று ஜாலியாக நடந்து சென்றது. எப்பவும் போல ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. தவறி விழுவதைப் போல் விழுந்தது. பஞ்சு மூட்டை நனைந்ததும் எப்படி இருக்கும். ரொம்ப வெயிட் ஆகியிருக்கும்தானே, கழுதையால் எழும்ப முடியவில்லை. தட்டுத்தடுமாறி நடக்க கூட முடியாமல் மெதுவாக நடந்து சென்றது. நான் என் எஜமானை ஏமாற்றினதால் எனக்கு கிடைத்த தண்டனை என்று நினைத்துக் கொண்டே மெல்ல மெல்ல நடந்து வீடு போய் சேர்ந்தது. ஐய்யய்யோ இதைப்போல நான் கஷ்டப்பட்டதில்லை, நான் ஏமாற்றியதால் இன்றைக்கு ஏமாற்றப்பட்டேனே என்று வருந்தியது.
அன்பான தம்பி, தங்கச்சி, பிறரை ஏமாற்ற நினைத்தால் நாம் ஒருநாள் ஏமாந்து போவோம். வீட்டுப்பாடம் எழுதாமல், படிக்காமல், பெற்றோரையும், ஆசிரியரையும் ஏமாற்றினால் நீங்களே ஏமாற்றப்படுவீங்க. பரீட்சையில் பெயில் ஆகிடுவீங்க. இதனால் ஆரம்பத்திலிருந்தே நன்றாக படித்து யாரையும் ஏமாற்றாமல் நல்ல பிள்ளைகளாய் வாழ்ந்து இயேசப்பாவை சந்தோஷப்படுத்துங்க குட்டீஸ். Bye
- Mrs. ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864