By Village Missionary Movement
Tuesday, 16-Mar-2021இன்றைய தியானம்(Tamil) 16-03-2021
பழைய மூட்டை
“...பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,” – பிலிப்பியர் 3:13
ஒரு இராஜா தன் அரண்மனையிலே ஒரு பெரிய விருந்து அளிக்க போவதாக அறிவித்தார். ராஜ வஸ்திரம் போன்ற சிறந்த உடை அணிந்து மட்டுமே வரவேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இதை கவனித்த பிச்சைக்காரன் ஒருவன் விருந்தில் கலந்துகொள்ள ஆசைப்பட்டு, உடையைக் குறித்து யோசித்தான். ராஜாவின் ஒரு பழைய உடையை கேட்க முடிவெடுத்தான். அதன்படி, மிகவும் கஷ்டப்பட்டு ராஜாவை சந்தித்து, பழைய ராஜ உடை ஒன்றை தனக்குத் தருமாறு கேட்டான். ராஜாவும் கொடுத்துவிட்டார். விருந்து நாளும் வந்தது, இந்த ராஜ உடை அணிந்து கெம்பீரமாய் மாறிய பிச்சைக்காரன் தன் பழைய துணிகளையும் ஒரு மூட்டையில் எடுத்துக்கொண்டான். போகும் இடமெல்லாம் அந்த மூட்டையை சுமந்தே திரிந்தான். விருந்திலும் அனுமதிக்கப்படவில்லை. அவனுடைய மரண தருவாய் வரையிலும் ராஜாவின் உடையை அணிந்தவனாகத் தான் இருந்தான். ஆனால் அழுக்கு துணிமூட்டையும் அவன் தலைமாட்டில் இருந்தது.
பரிசுத்த வேதாகமத்தின்படி, தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்துவிடுகிறார். நமக்கு புது வாழ்வை தந்துவிடுகிறார். ஆனால் நாமோ அந்த வாழ்வின் மேன்மையை உணராமல் கடந்த கால சில பாவங்களை தூக்கிக்கொண்டே திரிகிறோம். பிசாசானவன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நம்மை சோர்வடையச் செய்கிறான். ஐயோ ஊழியம் செய்ய எனக்கு தகுதியில்லை. நான் ஒரு பாவி என்றெல்லாம் நம்மை செயல்பட முடியாதபடி செய்துவிடுகிறான். இது ஒரு தேவையில்லாத சுமை நாம் கவனமாக இருக்க வேண்டும்.
பிரியமானவர்களே! இன்றும் நம்மில் அநேகர் தங்கள் வாழ்க்கையில் பழைய பாவ மூட்டைகளை சுமந்து கொண்டுதான் திரிகிறோம். சிலரிடம் பண ஆசை என்ற மூட்டை, சிலரிடம் பொருளாசை என்ற மூட்டை, சிலரிடம் மனமேட்டிமை என்ற மூட்டை, சிலரிடம் இச்சை என்கிற மூட்டை.... இப்படி அநேகம் உண்டு. தேவனால் மீட்க்கப்பட்ட நாம், ராஜாவின் கலியாண விருந்தாகிய பரலோக பாக்கியத்திற்கு பங்குள்ளவர்கள். அந்த உன்னத வாழ்வின் மேன்மையை உணர்வோம், பழைய பாவங்களால் உண்டான சுமைகளை களைந்துவிடுவோம். பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடுவோம்.
- Mrs. ஜோதி ஆனந்த்
ஜெபக்குறிப்பு:
இராக்லாந்து பைபிள் காலேஜில் புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்காக ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250