Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15-07.2023
Share:

By Village Missionary Movement

Friday, 14-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 15-07.2023

 

பாடுகள் மத்தியில் பெலன்

 

"தேவனே, என்னை ஆராய்ந்து. . . வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்" - சங்கீதம்139:23-24

 

2003ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி சென்னை, போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் எனது இரு கால்களும் உணர்வற்ற நிலையில் என் குடும்பத்தினர் என்னை சேர்த்தனர். அநேக பரிசோதனைகளுக்குப் பின் கடைசியாக ஒரு நோயின் பெயரை மருத்துவர்கள் சொன்னார்கள். "டிரான்ஸ்வேர்ஸ் மயிலைட்டிஸ்" என்பதுதான் அந்த வியாதி. முதுகுத்தண்டின் அடி எலும்புகளின் இடையில் உள்ள நியூரான்ஸ் என்ற பகுதியில் வைரஸ் கிருமி தாக்கி மூளையில் பிறக்கும் கட்டளையை கால்களால் அறியமுடியாது. கால்களின் மறுமொழியை மூளையால் அறியமுடியாது. மூளைக்கும் இடுப்புக்கு கீழுள்ள பகுதிக்கும் ஒன்றுமே செய்ய முடியாத நிலைதான் அந்த வியாதி.

 

எனது இரட்சிக்கப்பட்ட புதிய வாழ்வின் துவக்கத்தில் (12 வயதில்) தற்பரிசோதனைக்கு என்று நேரம் செலவிடுவது உண்டு. ஆனால் இப்போதோ (27-30 வயதில்) எனது திருமண வாழ்க்கையும், கணவரும், மகனும் என் ஆவிக்குரிய கண்களை அதிகமாகவே குருடாக்கி இருந்தனர். ஒட்டுண்ணி போல் ஒரு சில முறுமுறுப்புகள், அதிருப்திகள், எதிர்மறையான அறிக்கைகள் போன்ற காரியங்களுக்கு பழகி விட்டிருந்ததை திட்டமாக அறிந்தேன். ஆனால் இப்பொழுதோ பாடுகளே பாடசாலையாக எனக்கு மாறியது. நேரம் இல்லை தேவனே ! என்ற எனக்கு தேவனுடன் செலவு செய்வதற்கு அதிகமாகவே நேரம் கிடைத்தது. மருத்துவர்களும் எனக்கு செய்ய வேண்டிய மருத்துவத்தை முடித்து, இனி கால்களுக்கு பயிற்சி செய்து நடக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். ஆனாலும் இன்னும் படுக்கைதான். நோயின் காரணம் எந்த வைரஸ் கிருமி, அது எந்த ஒட்டுண்ணியால் நமக்கு வந்தது என்பதுதான் நமக்கும் தெரிந்துவிட்டதே! எனவே நானும் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

 

என் கண்கள் இரவும் பகலும் பரத்தில் இருந்து வரும் ஒத்தாசையை நோக்கி இருந்தது. துதித்தலே எனது முழுநேர வேலையாக மாறி இருந்தது. பிறர் உதவியுடன் நடக்க தேவன் கிருபை செய்தார். விசுவாசத்துடன் எழுந்து நடக்க முயற்சி செய்தேன். எனக்கு நானே சிறு சிறு இலக்கை வைத்து நடந்து பார்ப்பேன். அநேகமுறை கீழே விழுவேன். என் தேவனே என்னை பெலப்படுத்தும் என்று ஜெபிப்பேன். தேவன் மனமிரங்கி அற்புதம் செய்தார். இன்றோ எல்லாவற்றையும் செய்கிறேன்.

 

ஆம், நம்மை கசப்பாக்க அல்ல, கனிவாக்கிடவே பிரச்சனைகளும் நமக்கு வருகின்றன. ஆழ்கடலுக்குள் தேவன் நம்மை எடுத்துச் செல்வது நம்மை அமிழ்த்த அல்ல, ஆளாக்கவே என்று எங்கோ வாசித்தது நினைவுக்கு வருகிறது. பாடுகள் நீடிக்கலாம். ஆனால் நித்தியமாய் அல்ல! பாடுகளின் வேலைகள் வெளிப்பாடுகளின் வேலைகள். ஆமென்! அல்லேலூயா!

- Mrs. S.பெர்லின் செல்லபாய் 

 

ஜெபக்குறிப்பு:  

பணித்தளங்களில் மருத்துவமனை ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படும்

நபர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al