Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14-07.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 13-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 14-07.2023

 

நம்மை ஆராய்ந்து பார்ப்போம் 

 

"நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்” - 1 கொரி 11:31

 

ஒரு பெரிய கம்பெனியில் நோட்டிஸ் போர்டில் உங்களின் வளர்ச்சிக்குத் தடையாய் இருந்த நபர் இறந்துவிட்டார். அவரது உடல் இரண்டாவது மாடியில் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் வந்து பார்க்கவும் என எழுதியிருந்தது. இதைப் பார்த்ததும் அனைவர் உள்ளத்திற்குள்ளும் பல கேள்விகள் யாராக இருக்கும்? என் வளர்ச்சியைத் தடுத்தது யார் என்று கூட தெரியாமல் இருந்து விட்டேனே? அதனால் தான் எனக்கு பதவி உயர்வே இல்லையா? என யோசித்துக் கொண்டே எல்லோரும் அமைதியாக படியேறி சென்றனர். அங்கு ஒரு சவப்பெட்டி இருந்தது. வரிசையாக அருகில் சென்று பார்த்தால் அதனுள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. அதன் கீழ் "உன் வளர்ச்சிக்கு தடை நீ தான்! உன் வளர்ச்சியை வேறு யாரும் தடை செய்ய முடியாது பிறரை பார்க்காதே காரணம் காட்டாதே" என எழுதியிருந்தது.

 

நாமும் அநேக நேரங்களில் மற்றவர்கள்தான் என் வளர்ச்சிக்குத் தடை. அவர்கள் இல்லாவிட்டால் நான் நன்றாயிருப்பேன் என் நினைக்கிறோம். ஆனால் தேவன் ஒவ்வொருவரையும் தனித்துவமாய் படைத்து, தனித்தனியே வாக்களித்து, ஞாபக புஸ்தகத்தில் நம் கிரியைகளை தனியே எழுதுகிறார். நியாயாதிபதியாய் வரும்போது அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடு கூட வருகிறது என்று தனித்தனியே பலன் அளித்து கௌரவிக்கிறார். நாம் பிறரோடு இணைந்து இருந்தாலும் நம் வாழ்வில் சந்திக்கும் காரியங்களுக்கு பிறர் அல்ல அநேகமாக காரணம் நாமே. இதற்கு ஒவ்வொரு நாளும் நாம் நம்மை புதுப்பித்துக் கொண்டே இருந்தால் போதும். நாம் நம்மை புதுப்பிக்கும் போது அவரது வல்லமையான செயலை உணர முடியும். தாவீது அந்த பெலத்தோடுதான் கோலியாத்தை எதிர்கொண்டு ஜெயம் பெற்றான். யோசபாத் தன் படைக்கு முன்பாக பாடகர் குழுவோடு சென்று ஜெயத்தோடு வந்தார். எசேக்கியா வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்துவதற்கான செய்தியைக் கேட்டும் தன் வியாதியை தனக்கு செய்தியை அறிவிக்க வந்த தீர்க்கதரிசியிடம் முறையிடாமல் சுவர்புறமாய் திரும்புகிறான். 15 ஆண்டுகளைக் கூடுதலாக பெற்றான்.

 

பிரியமானவர்களே, நாம் நம்மை ஒவ்வொரு நாளும் புதுப்பித்து தேவனோடுள்ள உறவில் வளர்ந்து நமக்கு முன் உள்ள காரியங்களை பெரிதாக்காமல், குறை சொல்லாமல், தடையாக பாராமல் பரலோக வாழ்வை சுதந்தரிப்போம். நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர், விரோதமாய் முறையிடாதிருங்கள் (யாக். 5:9) என வேதத்தில் உள்ளது. உங்களுக்கு தேவன் தருவதை யாரும் தரவும் முடியாது. தடுக்கவும் முடியாது. இதை நாம் தெளிவாய் அறிவோம். 

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின் 

 

ஜெபக்குறிப்பு 

பணித்தளங்களில் ஸ்கூல் மிஷன் மூலம் சந்திக்கப்படும் மாணவர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet