Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13-07.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 12-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 13-07.2023

 

சண்டை பண்ணாதே... 

 

"…எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்" - எரேமியா 13:27 

 

நியாயாதிபதிகள் புஸ்தகத்தில் கிதியோன் இஸ்ரவேல் ஜனங்களுக்காக மீதியானியரோடு யுத்தம் செய்து கர்த்தருக்காக பெரிய காரியங்களை செய்ததை நாம் அறிந்திருக்கிறோம். அந்த சம்பவத்தில் நியாயாதிபதிகள் எட்டாம் அதிகாரத்தில் எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி, "நீ மீதியானியர் மேல் யுத்தம் பண்ண போகிறபோது எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்கு செய்தது என்ன" என்று அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள் என்று வாசிக்கிறோம். அதாவது ஆண்டவர் தரிசனம் கொடுத்து, கிதியோன் இஸ்ரவேல் ஜனங்களுக்காக யுத்தம் செய்திருக்கிறான். இப்பொழுது அந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றிக்காக ஆண்டவரை மகிமைப்படுத்தி கிதியோனை பாராட்ட வேண்டிய எப்பிராயீம் மனுஷர், அவனோடு அவன் மனதை சோர்வடைய பண்ண பலத்த வாக்குவாதம் பண்ணுவதை பார்க்கிறோம். அந்த சம்பவத்தில் கிதியோன் எப்பிராயீம் மனுஷரோடு தாழ்ந்து பேசி ஆண்டவருக்கு முன்பாக தன்னை காத்துக் கொண்டதை அறிவோம். ஆனால் இந்த எப்பிராயீம் மனுஷர் தொடர்ந்து சண்டைக்காரராகவே இருந்திருக்கிறார்கள். நியாயாதிபதிகள் 12ம் அதிகாரம் முதல் வசனத்தில் பார்த்தீர்கள் என்றால் எப்படி கிதியோனோடு சண்டை போட போனார்களோ அதேபோல் யெப்தாவிடமும் ஏன் எங்களை யுத்தத்திற்கு அழைக்கவில்லை என்று சண்டை போட்டதை பார்க்கிறோம். ஆனால் யெப்தா கிதியோனைப் போல தாழ்ந்து போகவில்லை, மாறாக எப்பிராயீம் மனுஷரோடு கோபமாக பேசி தன் ஆட்களைக் கூட்டிக் கொண்டு அவர்களிடம் சண்டைக்கு போகிறான். இதன் மூலமாக எப்பிராயீம் மனுஷரில் அநேகர் அழிக்கப்பட்டார்கள்.  

 

இதை வாசிக்கின்ற பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலும் நாம் தொடர்ந்து எப்பிராயீம் மனுஷரை போல சண்டைக்காரர்களாக இருந்து கொண்டே இருந்தால் அழிவு நிச்சயம். மாறாக சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்று இயேசு சொன்னபடி நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக மாறும்போது பாக்கியவான்களாக மாறுவோம். கர்த்தர் நம்மை உயர்த்துவார்.  

 

எனவே தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருந்து அழிந்து போன எப்பிராயீமர் போல அல்ல, இயேசு சொன்னபடி சாந்தகுணம் உள்ளவர்களாய் சமாதானம் பண்ணுகிறவர்களாக வாழ்ந்து பூமியை சுதந்தரித்துக் கொள்வோம். ஆண்டவர் நாமம் மகிமைப்படுவதாக. கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக என்ற வசனத்தின்படி உயர்வு நமக்கு நிச்சயம்.

- Bro. பெஞ்சமின்  

 

ஜெபக்குறிப்பு: 

பணித்தளங்கள் முழுவதும் வட்டார ஜெபக்குழுக்கள் தடையின்றி நடைபெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al