Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12-07.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 12-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 12-07.2023

 

PROJECT- கப்பல் கட்டுதல்

 

"கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” - சங்கீதம் 126:5

 

நோவா-நீதிமான், உத்தமன், தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தார் என்பது வேதம் கூறும் சாட்சி! தேவன் நோவாவை தெரிந்தெடுத்தார், எதற்காக? அவர் தான் செய்யப்போகிற திட்டத்தை சொல்வதற்கு மாத்திரமல்ல அவர் குடும்பத்தை பாதுகாக்க தேவன் நோவாவிடம் ஒரு Project ஒன்றை சொல்கிறார். அது என்ன? அவருக்கு தெரிந்த தோட்ட வேலையா? இல்லை, கப்பல் கட்டும் Project , அதிலும் condition சொல்கிறார். நீளம், அகலம், உயரம் இவ்வளவு என்றும், அறைகள் இப்படி இருக்க வேண்டும், கீல் பூச வேண்டும் என்று! ஆம், தேவனுக்கு முன்பாக உத்தமர்களாய் நடக்க விரும்புகின்ற நம் ஒவ்வொருவருக்கும் தேவன் "ஒரு Project கொடுக்கலாம். அது என்ன Project (குடும்பம், படிப்பு அல்லது வேலை) ஆக இருந்தாலும் சரி, நமக்கு rules உண்டு.

 

தேவன் சொல்லிவிட்டார் நாமும் கட்டுவோம் என்று நோவா கட்டுகிறார். கட்டும் பொழுது அவருடைய உள்ளத்தில் ஒரு வேளை பல கேள்விகள் எழுந்திருக்கலாம். நேர்த்தியாய் கட்டி முடித்து விடலாமா, கட்டிய பிறகு உயிரோடு இருப்போமா, சரி உயிரோடு இருந்தாலும் நாம் கட்டுகிற பேழை நம்மை பாதுகாக்குமா என்றெல்லாம். . . அதுமட்டுமல்ல மற்ற நபர்கள் அவருடைய வேலையை பார்த்து கேலி செய்திருக்கலாம் அல்லது "இவருக்கு தெரியாத வேலையை" அவர் கஷ்டப்பட்டு செய்கிறார் என்று பரிதாபம் காட்டி இருக்கலாம். எது எப்படியோ அவர் செய்யும் வேலையை பாதியில் விட்டுவிடவில்லை. கண்ணீரின் மத்தியில் முழுபெலத்தோடு, முழுமனதோடு Perfect ஆக கட்டி முடிக்கிறார்.  

 

நோவாவைப் போல நமக்கு ஆண்டவர் கொடுத்திருக்கின்ற Project "குடும்பம்" ஆக இருக்குமானால் நாமும் நீடிய சாந்தமுள்ளவர்களாய், அன்போடு உயர்ந்த குணநலன்களோடு கட்டுவோம். அல்லது நம்முடைய knowledgeக்கு பொருந்தாத படிப்பாக இருக்கலாம். அல்லது நம்முடைய படிப்பிற்கு பொருந்தாத வேலையாக இருக்கலாம். எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கட்டும். பாதியில் விட்டுவிட வேண்டாம். நோவாவின் செய்கை நமக்கு Rolemodel ஆக இருக்கிறது.

 

நோவாவுக்கு கப்பல்கட்ட கொப்பேர் மரம் இருந்தது. நமக்கு Project முடிக்க இயேசு கிறிஸ்து இருக்கிறார். இயேசு கிறிஸ்து சொல்கிறார், இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படிச் செய்யும் என்று! ஆனால் அத்தனை பாடுகளையும் ஏற்றுக் கொண்டார். இன்று நம் எல்லோருக்கும் உலக இரட்சகராக இருக்கிறார். நோவா கட்டிய பேழையின் மூலம் அவரும், அவருடைய குடும்பமும் பெருவெள்ள அழிவிலிருந்து காக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளும் காக்கப்படடன. அதுபோல இயேசுகிறிஸ்து நமக்கு தந்த குடும்பம், குடும்பத்தினர் படிப்பு அல்லது வேலை மூலம் நாமும் நம்மை சார்ந்தவர்களுக்கும் ஆசீர்வாதங்களை பெருகச் செய்வார்.

- Mrs.முத்துலட்சுமி வேதா 

 

ஜெபக்குறிப்பு: 

ஆகஸ்டு 15ல் நடைபெறும் வாலிபர் எழுப்புதல் முகாமில் பணிசெய்ய தன்னார்வ ஊழியர்கள் எழும்ப.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al