Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09-07.2023
Share:

By Village Missionary Movement

Saturday, 08-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 09-07.2023

 

பொறுமை தேவை 

 

"நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது" - எபிரெயர் 10:36

 

ஜான், ஜெகன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். சிறுவயதிலிருந்தே இருவரும் ஒன்றாக படித்து வந்தார்கள். படிப்பை முடித்து இரண்டு பேரும் வேலைதேட ஆரம்பித்தார்கள். அதில் ஜானுக்கு நல்ல கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது. வேலையில் அமர்த்தப்பட்டான். ஜெகனோ வேலைக்காக இன்னும் அலைந்து கொண்டேயிருந்தான். நாட்கள், வருடங்கள் கடந்து கொண்டே சென்றது.

 

ஒருநாள் ஜான் வேலை பார்த்த அதே கம்பெனியில் ஒரு interview நடந்தது. அதில் ஜெகனும் கலந்து கொண்டு select ஆகிவிட்டான். மறுநாள் ஜெகனும் அந்த கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்தான். இருவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் பொறுப்புடன் செயல்பட்டார்கள். இவர்கள் உண்மையாகவும், பொறுப்புடனும் செய்த வேலையை பார்த்து கம்பெனி மேனேஜர் அவர்களை மிகவும் பாராட்டி இருவருக்கும் promotion கொடுக்க நினைத்தார்கள்.

 

முதலில் ஜெகனை கூப்பிட்டு அவனுக்கு அந்த கம்பெனியில் வேலைபார்ப்பவர்களை கவனிக்கும் பொறுப்பை கொடுத்தார்கள். அவனும் தனக்கு கொடுத்த பொறுப்பை உண்மையாய் செய்ய தொடங்கினான். நாட்கள் கடந்தன. ஜானுக்கோ பயங்கர கோபம். என்னைவிட இத்தனை வருடங்களுக்கு பின் வந்த ஜெகனுக்கு promotion கொடுத்துவிட்டார்கள். ஆனால் எனக்கு கொடுக்கவில்லையே என்று இருதயத்திற்குள் மிகவும் புழுங்கினான். கடைசியில் கம்பெனியை விட்டு வெளியேற நினைத்தான். நேரே கம்பெனி மேனேஜரிடம் சென்று அவரிடம் நான் வேலையை Resign பண்ண போகிறேன் என்றான். மேனேஜர் காரணத்தைக் கேட்டார். உடனே ஜான் தன் இருதயத்திலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டித்தீர்த்து எனக்கு பின்னாடி வந்த ஜெகனுக்கு promotion கொடுத்துவிட்டீர்கள், என்னை மட்டும் அதே வேலையில் வைத்துவிட்டீர்கள் என்றான். மேனேஜர் தாழ்மையான குரலில் ஜான் பொறுமையாக இரு, அவசரப்படாதே. நாங்கள் குடும்பமாக வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதால் இந்த கம்பெனியின் முழுபொறுப்பையும் உன்னிடம் ஒப்படைத்துவிட்டு போகலாம் என்று நினைத்திருந்தோம். நீ இப்படி Resigning letter ஐ கொண்டு வந்து நிற்கிறாயே உன்னை எப்படியோ நினைத்தோம். நீ இப்படி இருக்கிறாயே என்று மிகவும் வருத்தப்பட்டார். ஜான் தனது இருதயத்திற்குள் எவ்வளவு பெரிய பொறுப்பை இப்படி அவசரப்பட்டு இழந்துவிட பார்த்தோமே என்று எண்ணி தனது தவறை உணர்ந்து மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டான். 

 

தம்பி, தங்கச்சி அவசரப்பட்டு எடுக்கிற எந்த முடிவும் நமக்கு பெரிய இழப்பைத்தான் கொண்டுவரும். எனவே பொறாமைப் படாமல் பொறுமையுடன் இருக்க கற்றுக்கொள்.

- Mrs.சாராள் சுபாஷ்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet