Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05-07.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 05-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 05-07.2023

 

நன்றியோடு....

 

"...அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே" - சங்கீதம் 103:2

 

பார்வையற்ற ஒரு சிறுவன் முக்கியமான இடத்தில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். அவனது பக்கத்தில் ஒரு போர்டில் "நான் குருடனாயிருக்கிறேன் எனக்கு உதவுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அருகே சிலர் போட்ட நாணயங்கள் சிதறி கிடந்தன. அந்த வழியாக வந்த ஒரு மனிதர் சில நாணயங்களை எடுத்து அவன் வைத்திருந்த பாத்திரத்தில் போட்டுவிட்டு, அந்த சிறுவனின் பக்கத்தில் இருந்த போர்டில் ஏதோ எழுதினார். சற்று நேரத்தில் அவனது பாத்திரம் நாணயங்களால் நிரம்ப ஆரம்பித்தது. சிலர் நின்று அவனுக்கு பணத்தை கொடுத்து சென்றார்கள். சாயங்கால வேளையில் அந்த போர்டை மாற்றி எழுதின மனிதர் என்ன நடக்கிறது என்று அறிய வந்தார். அவரது காலடிச் சத்தத்தை கேட்டு அவர்தான் என்று அறிந்த சிறுவன், "ஐயா நீர் யார்? நீர் என்ன எழுதினீர்? எனக்கு பணம் குவிகிறதே" என்று கேட்டான். அதற்கு அவர், "நான் உண்மையைத்தான் எழுதினேன். நீ எழுதினதையே சற்று மாற்றி எழுதினேன்" என்றார். அதற்கு அந்த சிறுவன், "என்னதான் எழுதினீர்கள் சொல்லுங்கள்" என்றான். அதற்கு அவர் "இந்த நாள் ஒரு இனிய நாள்! அழகு மிகுந்த நாள்! என்னால் அதை பார்க்க முடியவில்லை! ஆனால் நீங்கள் இந்த உலகை ரசியுங்கள். கொடுத்து வைத்தவர்கள் என்று எழுதினேன்" என்றார். இதை வாசித்தவர்கள் அவர்களது பாக்கியத்தை உணர்ந்தனர். அவர்களது இருதயம் நன்றியால் நிறைந்தது. கடவுள் கொடுத்த ஆரோக்கியத்திற்காக, வேலைக்காக நன்றி செலுத்தினார்கள். 

 

ஆம், அநேக நேரம் ஆண்டவர் நமக்கு செய்த காரியங்களுக்காக நன்றிசொல்லும் உணர்வுகூட இல்லாமல் இருக்கிறோம். ஆண்டவராகிய இயேசு வாழ்ந்த நாட்களில் குஷ்டரோகமுள்ள மனிதர் 10 பேர் சுகத்திற்காக அவரை தேடி வந்து, ஐயரே எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அந்தபடியே இயேசுவின் வார்த்தையின்படி 10 பேரும் சுகத்தை பெற்றுக் கொண்டனர். ஆனால் 10 பேரில் ஒருவர் மாத்திரமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்தினார். 

 

ஆம், பிரியமானவர்களே நம்முடைய ஆண்டவர் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னையே நமக்காக சிலுவையில் ஒப்புக்கொடுத்தார். ஆனால் நம்மிடம் நன்றியை மாத்திரமே எதிர்பார்க்கிறார். நம்முடைய கரங்களில் கிடைக்கப்பெற்ற ஆசீர்வாதத்திற்காகவும், சுகத்திற்காகவும் ஒவ்வொரு நாளும் நன்றியோடு இருக்க வேண்டும். இல்லாத ஒன்றிற்காக ஏங்கி தவிப்பதைவிட இருக்கிறதற்காக நன்றியை செலுத்துவோம்! நல்ல சரீரத்திற்காகவும், சரீரங்களின் செயல்பாட்டிற்காகவும், அவரால் கிடைக்கப் பெற்ற இரட்சிப்பு, அபிஷேகத்திற்காகவும் ஒவ்வொரு நிமிடமும் நன்றியோடு இருப்போம்.

- Mrs. சக்தி சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு: 

ஆமென் கிராமிய டிவியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மூலம் அநேகர் தேவ அன்பை ருசிக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet