By Village Missionary Movement
Tuesday, 04-Jul-2023இன்றைய தியானம்(Tamil) 04-07.2023
இரும்பு குவிமாடம்
"கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;…" - சங்கீதம் 121:7
"அயன் டும்" என்பது இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் உருவாக்கப்பட்ட நடமாடும் சுமார் 90 கிலோ எடையுள்ள, வான்வழி தாக்குதல் பாதுகாப்பு அமைப்பாகும். இதன் மூலம் குறுகிய தூர ராக்கெட்டுகள் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் ஆகியவற்றை இடைமறித்து அழிக்க முடியும். 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காசா - இஸ்ரேல் யுத்தத்தில் பல ஏவுகணைகளையும், ராக்கெட்களையும் இந்த கருவி தரைமட்டமாக்கியது. ஒரு மாலைப் பொழுது, தரை வழியாக இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கிய போது படைகள் முழுவதும் கலங்கத்தக்கதாக "மணல் புயல்" வீசியது. தங்களுக்கு எதிரே எதுவும் புலப்படாத நிலையில் மிகவும் குழம்பி, தோற்று விடுவோம் என்ற நிலையில், தங்கள் ராணுவ தளபதியின் கட்டளையின்படி அனைத்து இஸ்ரேல் வீரர்களும் மணலில் முழங்கால்படியிட்டு தேவனை நோக்கி கதற ஆரம்பித்தார்கள்.
அந்தோ! மணல் புயல் அடங்குவதற்கு பதிலாக அதிகரிக்க ஆரம்பித்தது. "தேவன் நமக்கு உதவி செய்யவில்லை" என்று எண்ணி படைகள் முழுவதும் அப்படியே மணலில் படுத்து விட்டனர். இரவு கடந்து விடிய ஆரம்பித்தபோது 'புயல்' எல்லாம் அடங்கி தெளிவான பாதை தெரிய தொடங்கியது. அப்பொழுதுதான் கர்த்தர் தங்களை பெரிய ஆபத்தில் இருந்து காத்துக்கொண்டார் என அறிந்து நன்றி செலுத்தினார்கள். காரணம் அவர்கள் கடந்து வந்த பாதையில் மிக அதிக அளவில் கண்ணி வெடிகள் மணலில் புதைத்து வைக்கப்பட்டு, அவைகளை வெடிக்கச் செய்யும் கம்பி இழைகள் மணலில் கிடந்ததை கண்டார்கள். ஒருவர் கால் அதன் மீது பட்டிருந்தாலே போதும், முழு ராணுவமும் அழிந்து இருக்கும் என்பதை உணர்ந்து கர்த்தருக்கு மீண்டும் நன்றி செலுத்தினார்கள்.
சில நேரங்கள் கர்த்தர் தமது பிள்ளைகளுக்கு செய்வது எதிராக இருப்பதைப்போலத் தோன்றினாலும், ஒரு பொழுதும் அவர் தீமையான காரியத்தை செய்ய மாட்டார். கண்ணின் கருவிழியை இமை பாதுகாப்பது போல, நம்மை காக்க வல்ல தேவன் நம்க்குண்டு. வேடனுடைய கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் அவர் நம்மை தப்புவிக்கிறார். ஆகவே காரியங்கள் நாம் விரும்புவதற்கும் எதிர்பார்ப்பதற்கும் எதிராக நடக்கிறதே என கலங்காதீர்கள். அவர் சகலத்தையும் நன்மைக்கு நேராய் நடத்துவார்.
- Mrs. ஜெயந்தி பாக்கியநாதன்
ஜெபக்குறிப்பு
ஆமென் கிராமிய டிவியின் பொருளாதாரத் தேவைகளுக்காக ஜெ பியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864