Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  15-03-2021
Share:

By Village Missionary Movement

Monday, 15-Mar-2021

இன்றைய தியானம்(Tamil)  15-03-2021

தகப்பன் உள்ளம் 

”...அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.” – லூக்கா 15:20

புதிய காரை கொண்டு வந்து அப்பா நிறுத்திவிட்டு அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். மூத்த மகன் காரை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருக்க அவனது 4-வயது தம்பி ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் கிறுக்கிவிட்டான். இதைப் பார்த்த மூத்த மகன் கோபத்தில் பக்கத்திலிருந்த ஒரு கம்பியை எடுத்து தனது தம்பியின் கை விரல்களை பலமாக தாக்கினான். அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அப்பா வேகமாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனாலும் விரல்கள் சரியாக பல மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அப்பா மூத்த மகனைப் பார்த்து காரில் விழுந்த கோடுகளுக்காக உனது தம்பியின் கைவிரல்களை சேதப்படுத்திவிட்டாயே. கண்ணாடியைக் காட்டிலும் உன் தம்பியின் கை விரல்கள் அதிக முக்கியமல்லவா எனக் கூறினார். மூத்த மகன் பேச முடியாமல் நின்றான். 

வேதத்தில் லூக்கா 15-ம் அதிகாரத்தில் ஒரு தகப்பனுக்கு இரண்டு குமாரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இளையவன் ஆஸ்தியில் தனக்குரிய பங்கை பிரித்துக் கொண்டு தன் இஷ்டப்படி வாழ்கிறான். ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லாவற்றையும் செலவழித்துவிட்டு சாப்பிட கூட வழியில்லாமல் பன்றியின் தவிடு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டபோது, மனந்திருந்தி, புத்திதெளிந்து தகப்பனிடத்தில் வருகிறான். தகப்பனோ அவனை அணைத்துக் கொண்டு அவனுக்காக சந்தோஷப்படுகிறான். ஆனால் மூத்த குமாரனால், தன் சகோதரனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இதை வாசிக்கின்ற நண்பர்களே! இன்றைய உலகம் ஒருவரின் தவறுகளுக்காக தண்டனை கொடுக்க முந்திக்கொள்கிறது. ஆனால் தகப்பன் உள்ளம் படைத்தவர்கள் அநேகர் இல்லை. பாவம் செய்து அதிலிருந்து மனந்திருந்தி வெளியே வந்து வாழவேண்டும் என்று நினைக்கிற இளையகுமாரனை போன்ற வாலிபர்கள், பெரியவர்கள் ஏராளம். ஆனால் அவர்களை ஏற்றுக்கொள்ள சிலர் மூத்த குமாரனைப் போன்று தயங்குகிறார்கள். ஆனால் நாம் தகப்பனை போல ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், அரவணைக்க வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும். ஆம், ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் இருக்க வேண்டியது தகப்பன் உள்ளம்! 
-    Bro. எஸ்றா

ஜெபக்குறிப்பு:
Peace Centre கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet