Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03-07.2023
Share:

By Village Missionary Movement

Sunday, 02-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 03-07.2023

 

ஒரே இராத்திரியில் 

 

“கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்” - யாத்திராகமம் 14:14    

 

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைநகரான வாஷிங்டனில், மில்லர் என்ற பெயருடைய தேவபக்தி நிறைந்த ஓர் தொழிலதிபர் இருந்தார். தன் தொழிலின் வேலைப்பளு நிமித்தமாக, உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டிருந்த தன் விவசாயப் பண்ணையை சில விவசாயிகளை பணியில் அமர்த்தி வேலைகளை கவனித்து வந்தார். எப்பொழுதும் தேவனுடைய காரியத்திற்கு முதலிடம் கொடுப்பது, ஆலயத்திற்கு ஒழுங்காக செல்வது போன்ற காரியங்களை தவறாது செய்து வந்தார். ஒரு சனிக்கிழமை அன்று தன் பண்ணையை பார்வையிட சென்றபோது, உருளைக்கிழங்குகளை அழிக்கும் ஒருவிதப் பூச்சி வந்து தோட்டத்தை நிரப்பி இருந்ததை கண்டார். பூச்சி மருந்து அடித்தால் பூச்சிகள் இறந்து விடும்; ஆனால் அதைத் தொடர்ந்து அந்த வேலையை முடிக்க இரண்டு நாட்கள் ஆகும் என்பதால், தான் ஆலயம் செல்ல முடியாது என்பதை உணர்ந்து, பூச்சி மருந்து அடிக்காமல் ஞாயிறு அன்று வழக்கம் போல ஆலயம் சென்றார்.  

 

இரண்டு நாட்கள் கழித்து பூச்சிகளால் அழிக்கப்பட்டு இருக்கும் தோட்டத்தை பார்வையிட சென்றார். என்ன ஆச்சரியம்! அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக உருளைக்கிழங்கு செடிகள் பெரிதாக வளர்ந்திருந்தன. எப்படி இது நடந்தது என்று அவருக்குப் புரியவில்லை. அந்தப் பயிர்களை உற்றுப் பார்த்த பொழுது பெரிய பெரிய வண்டுகள், உருளைக்கிழங்கை அழிக்கும் வண்டுகளை பிடித்துத் தின்று கொண்டிருப்பதை கண்டார். அதில் இரண்டு பூச்சிகளைப் பிடித்து விவசாய ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பின போது, அங்கிருந்து சில நாட்களில் பதில் வந்தது. "இந்த வண்டுகள் அமெரிக்காவில் இல்லாதவை. இவை தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்படும். இவைகள் ஒரே இரவிலே சுமார் 6000 கி.மீ தொலைவில் இருந்து உங்கள் உருளைக்கிழங்குகளை பாதுகாக்க தேவன் அவைகளை அனுப்பி இருக்கிறார்" என எழுதி இருந்தது. 

 

ஆம், இயேசுகிறிஸ்து கூறினதைப் போல, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்" என்ற வசனத்தின்படி கர்த்தருடைய காரியங்களுக்கு முதலிடத்தையும் முக்கியத்துவத்தையும் நாம் தரும்போது, நம் உலக காரியங்கள் அனைத்திலும் தேவன் அற்புதம் செய்ய முடியும். கர்த்தர் நம் வாழ்வில் ஒரே ராத்திரியில் சத்துருக்களை சங்காரம் பண்ணி, இரட்சிப்பை கட்டளையிடுவார். யாத்திராகமம் 12 ம் அதிகாரத்தில் திரளாய் பெருகியிருந்த அசீரியரின் சேனையை ஒரே ராத்திரியில் ஒரு தூதனை எழுப்பி 1,85,000 பேரை அழித்துப் போட்டார். தம் மக்களுக்கு விரோதமாக எழும்பின இரண்டு ராஜாக்களையும் ஒரே ராத்திரியில் குளவிகளை அனுப்பி விரட்டி விட்டார். (யோசு. 24: 12). நாமும் தேவனுக்கு முதலிடம் கொடுப்போம். வாழ்வில் வரும் பிரச்சனைகளை எளிதில் வெல்லுவோம். அல்லேலூயா!!

- Bro.பாக்கியநாதன்

 

ஜெபக்குறிப்பு: 

ஆமென் கிட்ஸ் சேனல் ஆரம்பிக்கப்பட மற்றும் ஆயத்தப் பணிகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet