Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 02-07.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 02-Jul-2023

இன்றைய தியானம்(Tamil) 02-07.2023 (Kids Special)

 

தேவன் பார்த்துக் கொள்வார் 

 

"ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?" - மத்தேயு 6:26

 

குட்டி செல்லங்களே! எப்படி இருக்கீங்க. புது Class, புதுteacher, புது Friend கிடைச்சிருக்காங்களா? ரொம்ப Happy யா இருக்கீங்களா? எனக்கு நல்ல Dress இல்லையே! நான் விரும்புகின்ற உணவு கிடைக்கலையே. இந்த வருட படிப்பை எப்படி முடிக்கப் போகின்றேன் என்று கவலைப்படுறீங்களா? Don’t worry உங்கள் பரமபிதா எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார். ok குட்டீஸ் கதை கேட்கலாமா?

 

அழகான வயல்வெளிகள் ஆடு, மாடு, கோழி, வாத்து என்று கிராமத்து வாழ்க்கை ரொம்ப அழகாக இருக்கும் இல்லையா? ஒரு வீட்டில் நிறைய கோழிக்குஞ்சுகள் இருந்தன. அவைகள் அருகிலுள்ள வயல்களுக்கு சென்று விளைந்திருக்கும் நெற்கதிர்களை கொத்தி சாப்பிட்டுவிட்டு ஜம்முன்னு தூங்கிடும். ஒருநாள் அந்த வயலுக்கு சொந்தக்காரர் வந்து சுற்றிப்பார்த்தார். நன்றாக விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கின்றது. இதனால் இன்னும் இரண்டு நாட்களில் இந்த வயலில் உள்ள எல்லா நெல்லையும் அறுவடை செய்து கொள்ளலாம் என்று செல்போனில் அவர் மனைவியிடம் பேசிக் கொண்டிருப்பதை கோழிக்குஞ்சு கேட்டுவிட்டது.

 

அம்மா, அம்மா என்று அழைத்துக் கொண்டு குடுகுடுன்னு ஓடினது கோழிக்குஞ்சுகள். என்ன இவ்வளவு வேகமா ஓடி வாரிங்களே என்ன ஆச்சுன்னு அம்மா கோழி கேட்க, வயல்காரர் பேசிக்கொண்டதை அம்மாவிடம் கோழிக்குஞ்சுகள் கவலையோடு சொன்னது. சரி, இன்னும் இரண்டுநாள் இருக்குதுல பார்த்துக்கொள்ளலாம் என்று அம்மா கோழி சொல்லி விட்டது. இரண்டு நாட்களும் முடிந்துவிட்டது. கோழிக்குஞ்சுகளுக்கு ரொம்ப கவலை. வயிறார சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு இப்போது இல்லாமல் போய்விட்டதே! நாளைக்கு சாப்பிட என்ன செய்வது என்று அம்மா அம்மா என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடியது கோழிக்குஞ்சுகள். அம்மா கோழி வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கும் வயிறார சாப்பிட்ட கோழிக்குஞ்சுகள் இப்படியும் ஒரு இடம் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டுப் போனது. அம்மா இருக்க கவலை இல்லை என்று கோழிக்குஞ்சுகள் சந்தோஷமாய் இருந்துச்சு.

 

என்ன குட்டி பிள்ளைகளே! கோழியே தன் குஞ்சுகளை சரியாய் பராமரிக்கும் என்றால் நம் பரம தகப்பன் நம் காரியங்களை பார்த்துக் கொள்ள மாட்டாரா? நிச்சயம் உங்கள் தேவைகளை சந்திப்பார். கலங்காதீங்க ok குட்டீஸ். Bye . . .

- Sis.தெபோராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al