By Village Missionary Movement
Tuesday, 27-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 28-06.2023
கனி தரும் செடி
"யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்" - ஆதி. 49:22
ஒன்றா இரண்டா! கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்த யோசேப்பினுடைய வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. திறந்த புத்தகமாயுள்ள அவரது வாழ்வை வசன ஆதாரங்களுடன் பார்ப்போமா?
1. சிறுவயதிலிருந்தே தகப்பனுக்கு கீழ்ப்படிந்து, அவரது அன்பைப் பெற்ற நேசகுமாரன் யோசேப்பு! (ஆதி. 37:3)
2. தனது அண்ணன்மார்களுடன் தீய செயலுக்கு உடன்படாமல், விலகியிருந்த குட்டித்தம்பி! (ஆதி. 37:2)
3. தேவன் கொடுத்த கனவுகளை யாவரிடமும் சொல்லும் வெள்ளையுள்ளம் கொண்டவன். (ஆதி 37:5)
4. அடிமையாய் இருந்தாலும் தன் வேலையை சிறப்பாய், உண்மையும் உத்தமமுமாய், சரியான நேரத்திற்குள் செய்து முடிக்கும் காரியசித்தியுள்ளவன். (ஆதி.39:2,3)
5. தினம் தினம் வந்த மாம்சத்தின் இச்சைக்கு எதிராய் போராடி வெற்றி பெற்ற ஹீரோ! (ஆதி. 39:10)
6. தவறான குற்றச்சாட்டினால் சிறையில் அடைக்கப்பட்டபோதும் முறுமுறுக்காதவன். (ஆதி. 39:21-23)
7. சிறையிலும் பிறர் நலனில் அக்கறை கொண்டு, அவர்களுக்கு உதவிசெய்து தேவனைப் பற்றிக் கூறிய ஊழியன். (ஆதி. 40:8)
8. தேவன் அருளிய ஞானத்தை பயன்படுத்தியபோது தனக்கல்ல, தேவனுக்கே மகிமையைச் செலுத்தியவன். (ஆதி. 41:16)
9. கொடுக்கப்பட்ட அதிகாரத்தை இஷ்டப்படி பயன்படுத்தாமல் நிதானமாய் யோசித்து திறமையுடனும் தூய்மையுடனும் ஆட்சி செய்தவன். (ஆதி. 41:43,55)
10. தனக்கு தீங்கிழைத்த தனது சகோதரர்களை பழிவாங்க நினைக்காமல் மனதார மன்னித்தவர். (ஆதி. 45:15)
11. முழுக்குடும்பத்தையும் ஆதரித்தவர். (ஆதி. 46:5,6)
12. வயதான தகப்பனை மிகவும் மரியாதையாய் நடத்தியவர். (ஆதி. 46:29)
13. கர்த்தரின் வாக்குறுதியை விசுவாசித்து, தனது எலும்புகளை கானானில் அடக்கம் செய்ய கட்டளையிட்டவர். (ஆதி. 50:25)
வாலிபரே! உங்களைப்போல யோசேப்பு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சாதாரண வாலிபன்தான். ஆனால் அவனிடம் இத்தனை நற்குணங்கள் காணப்பட்டது எப்படி? அவனிடம் கர்த்தருக்குப் பயப்படும் பயம் காணப்பட்டது. எல்லாவற்றிற்கும் வேர் இதுதான். நீயும் கர்த்தருக்குப் பயந்து வாழ்வாயானால் உன் வாழ்வும் பிறர் பின்பற்றத்தக்க முன் மாதிரியான வாழ்வாகும்.
- Mrs. தவமணி வைரவேல்
ஜெபக்குறிப்பு:
நமது அனைத்து மிஷனெரி குடும்பங்களுக்காகவும், பயிற்சியில் உள்ளவர்களுக்காகவும் ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864