By Village Missionary Movement
Tuesday, 27-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 27-06.2023
இருளை மாற்றும் கர்த்தர்
"தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்" - சங்கீதம் 18:28
இங்கிலாந்தில் பிறந்த ஜான்பனியன் என்பவர் வறுமை காரணமாக படிக்க இயலாமல் பாத்திரம் விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் இளம்பிராயத்தில் தீய பழக்க வழக்கங்களோடு வளர்ந்தார். பொய் சொல்லியும், மற்றவர்களை ஏமாற்றியும், பெரியவர்களை மதிக்காமலும் இருந்தார். தனது 19-வது வயதில் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்தார். அவள் அடிக்கடி கிறிஸ்துவைப் பற்றி ஜானிடம் பேசுவாள். பின்னர் ஜான் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தார். அவருடைய வாழ்வின் இருள் விலக ஆரம்பித்தது. ஒருநாள் சுகவீனப்பட்டு இருக்கும்போது மார்ட்டின் லூத்தரின் புத்தகத்தைப் படித்து தன்னைக் கிறிஸ்துவுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்தார்.
அந்நாட்களில் இங்கிலாந்தில் போதகர்கள் தவிர மற்ற எவரும் சுவிசேஷசத்தைப் பிரசங்கிக்கக் கூடாது என்றொரு சட்டம் இருந்தது. இதனை அறிந்த ஜான் பனியன், மனுஷருக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதே உத்தமம் என்று கருதினார். சுவிசேஷத்தை எங்கும் சென்று பிரசங்கித்தார். இதனால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். சிறையில் இருந்த போது "மோட்ச பிரயாணம்" என்ற தனது தலைசிறந்த புத்தகத்தை எழுதினார். 43-வது வயதில் விடுதலை செய்யப்பட்டார். தனது 59-வது வயது வரை ஊழியம் செய்தார். எப்போது கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டாரோ, அப்போது அவரின் பாவ இருள் விலகியது. உலகிற்கு வெளிச்சம் கொடுக்க ஆரம்பித்தார்.
ஆம், பிரியமானவர்களே! கிறிஸ்துவாகிய ஒளியை நாம் பின்பற்றும் போது நம்மில் உள்ள இருள் விலகி நாம் ஆண்டவரை உறுதியாய் பற்றிக் கொள்வோம். ஒரு விளக்கு உள்ள பகுதியில் நாம் ஒளியை நோக்கிச் சென்றால் நம்முடைய நிழல் நமக்குப் பின்னாகச் செல்லும். ஒளியை விட்டு விலகிச் சென்றால் நிழல் நமக்கு முன்பாக வந்து விடும். அதுபோலத்தான் நாம் கிறிஸ்துவாகிய ஒளியை நோக்கிச் சென்றால் நமக்குள் இருக்கும் பாவ இருள் விலகும். வேதத்தில் கூட யோவான். 8 : 12-ல் "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்; என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்' என்று இயேசு கூறினார். நாம் ஒளிவீச ஆரம்பித்தால் பிதா மகிமைப்படுவார் என்று மத்: 5:16 கூறுகிறது. நம்முடைய வெளிச்சம் பிறரை உயிர்ப்பிக்கிறதாக இருக்கும். ஆமென்.
- Mrs. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:
நம் வளாகத்தில் தங்கியுள்ள ஓய்வுபெற்ற மிஷனெரிகளுக்காக, அவர்களது சரீர சுகத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864