Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25-06.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 25-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 25-06.2023 (Kids Special)

 

உண்மைக்கு கிடைத்த பரிசு

 

"…கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்,…" - மத்தேயு 25:21

 

அன்பு செல்லங்களே! குட்டிக் கண்மணிகளே! எப்படி இருக்கீங்க? Leave நாட்களில் VBS க்கு போய் பாடல், கதை, game இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் கற்றுக் கொண்டிருப்பீங்க. அப்படித்தானே குட்டீஸ்! அடுத்த புதிய வகுப்புக்கு சென்று நன்றாக படித்து சாதனைகள் புரிய என் வாழ்த்துக்கள்.  

 

ஒரு நாட்டை ஆளுகின்ற ஒரு ராஜா இருந்தார். ராஜா என்றாலே அரண்மனை அவரை சுற்றி படைவீரர்கள் என்று பிஸியாகவே இருப்பாங்க, இல்லையா. அரண்மனையில் இருந்து அரசவைக்கு செல்வதற்காக ராஜா யானையில் பயணம் செய்ய மெய்க்காப்பாளர்கள் சூழ அவரை பத்திரமாக அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அந்த நாட்களில் கார், ஏரோபிளேன் எல்லாம் கிடையாதுதானே, இப்போ இருக்கிற மாதிரி "ஜம்"முன்னு போற A.C கார் எல்லாம் அப்போ இல்லை. அசைந்து அசைந்து போற யானைதானே! திடீரென்று யானை ஒரு குலுங்கு குலுங்குச்சு பாருங்க, ராஜா முன் வைத்திருந்த பெட்டி தொப்புன்னு கீழே விழுந்து விட்டது. அதிலிருந்து தங்க காசுகள், வெள்ளி காசுகள் வைரகற்கள் எல்லாம் உருண்டு ஓடியது. எல்லாரும் ஓடி ஓடி எனக்கு தங்கம், எனக்கு வைரம், எனக்கு வெள்ளி என்று எடுத்துக் கொண்டார்கள். ராஜா நிறைய சொத்துக்கு சொந்தக்காரர் இல்லையா? அதனால் கிழே விழுந்த எல்லா காசுகளையும் நீங்களே வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னதும் எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். பாதுகாவலனான ஒருவர் மட்டும் ஈட்டியை பிடித்தபடி ராஜாவையே பார்த்துக் கொண்டிருந்தான். ராஜாவுக்கு எதுவும் ஆபத்து வந்து விடக்கூடாது என்று கவனமாய் இருந்த அவரைப் பார்த்து எல்லாரும் சிரித்தார்கள். பாவம் இவனுக்கு ஒரு காசு கூட கிடைக்கவில்லை என்றார்கள். ராஜா அரசவைக்கு வந்ததும் தன் வேலையில் உண்மையாய் இருந்து தன்னை பாதுகாத்த அந்த நபருக்கு நிறைய பொற்காசுகள், சொத்து, பதவி உயர்வு என கொடுத்து அவருக்கு மேன்மையையும் கனத்தையும் கொடுத்தார். கிழே விழுந்த காசை எடுத்தவர்களுக்கெல்லாம் ஆச்சரியம். அவரின் உண்மைக்கு கிடைத்த பரிசு என்பதை எல்லாரும் அறிந்து கொண்டார்கள். அரசவையில் இருந்த அனைவரும் மகிழ்ச்சி கடலில் துள்ளிக் குதித்தார்கள்.  

 

அன்புச்செல்லக்குட்டிகளே! ராஜா தனக்கு உண்மையாய் இருந்த மனிதனை இப்படி உயர்த்த கூடுமானால் நம்மைப் படைத்த ராஜாதிராஜாவாகிய இயேசுகிறிஸ்துவும் உண்மையுள்ளவர்களை பரிபூரண நன்மையினால் நிரப்புகிறார். உனக்கு கொடுக்கப்பட்ட எந்த காரியத்திலும் நீ உண்மையாய் இருந்தால் மேன்மையும் கனமும் உன்னை தேடி வரும் குட்டீஸ். ok தானே!

- Sis. பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al