By Village Missionary Movement
Sunday, 14-Mar-2021இன்றைய தியானம்(Tamil) 14-03-2021 (Kids Special)
திருப்தியாய் இரு
“போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.” - 1தீமோத்தேயு 6:6
ஒரு ராஜா தன் நாட்டை நேர்மையாக ஆட்சி செய்து வந்தார். அவருக்கு நல்ல ஆலோசனைகளை கொடுத்து வந்தார் மந்திரி ஒருவர். ராஜாவும் மந்திரியின் நுட்பமான ஆலோசனையை கேட்டு நாட்டை ஆண்டு வந்தார்.
அந்த மந்திரிக்கு ஒரு தம்பி இருந்தார். விவசாயியான அவர், படிப்பறிவு இல்லாதவராகவும், மிகுந்த பேராசையுள்ளவராகவும் இருந்தார். அவர் தன் மந்திரியான அண்ணனிடம் நீங்கள் எத்தனையோ ஆண்டுகளாக மந்திரி பதவி வகித்து விட்டார்களே! நானோ வயலில் வேலை செய்து கடினமாக உழைக்கிறேன். மூன்று நாட்கள் மட்டும் நான் மந்திரியாக இருக்க ஆசைப்படுகிறேன். நீங்கள் என் நிலங்களை 3 நாட்கள் கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னான். மந்திரியும் தன் சகோதரனின் ஆசையை ராஜாவிடம் சொன்னார். அவரும் வேறு வழியின்றி மந்திரியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். விவசாயி சகோதரனும் அரண்மனைக்கு வந்து மந்திரியின் உடைகளை அணிந்து கொண்டான்.
ராஜா அந்த புதிய மந்திரியை பார்த்து, வண்டிகள் சத்தம் கேட்கிறதே என்றார். அவரும் அரண்மனைக்கு வெளியே சென்று பார்த்து விட்டு, ஆம் ராஜாவே வண்டிகள் வந்து கொண்டிருக்கிறது. எத்தனை வண்டிகள்? எங்கிருந்து வருகிறது? என்ன பொருட்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று கேட்டார். இத்தனை கேள்விகள் கேட்டால் நான் எப்படி பதில் சொல்லுவது என்று கேட்டார். அரண்மனையே அமைதியானது. அந்த நேரம் பார்த்து அண்ணன் மந்திரி வந்தார். ராஜாவே வண்டிகள் 38. 1 வண்டியில் 10 மூட்டைகள் வீதம் 380 மூட்டைகள் இறக்கியிருக்கிறார்கள். பக்கத்து நாட்டு ராஜா சக்கரவர்த்திக்கு அனுப்பியிருக்கிறார் என்று சொன்னதும், ராஜாவின் முகத்தில் கோபம் மாறி சந்தோஷமானார்.
தம்பி மந்திரி பார்த்தார், ராஜாவே இந்த மந்திரி பதவி எனக்கு வேண்டாம். தகுதியுள்ள, புத்திசாலித்தனமான என் அண்ணனுக்கே கொடுத்து விடுங்கள். எனக்கு விவசாய வேலைதான் சரியானது. தகுதிக்கு மேல் ஆசைப்படாமல் திருப்தியாய் வாழ கற்றுக்கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று சொன்ன தம்பியை அண்ணன் மந்திரி பெருமிதத்துடன் பார்த்து வழியனுப்பினார்.
தம்பி-தங்கச்சி, பேராசை எப்பொழுதும் பெருநஷ்டத்தையே கொண்டு வரும். உனக்கிருக்கும் வீடு, cell phone, dress, parents எல்லாமே இயேசப்பா கொடுத்தது.
சீ சீ இது நல்லாவே இல்லை என்று மற்றவர்களிடமிருப்பது எனக்குக் கிடைத்தால் நல்லா இருக்கும் என்று எண்ணாதே. உன்னிடமிருப்பது போதுமென்று வாழ பழகிக் கொண்டால் இயேசப்பா சந்தோஷப்படுவாங்க Ok வா.
- Mrs. லீபனோன் ராஜ்குமார்
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250