Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 22-06.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 21-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 22-06.2023

 

மன்னிப்பின் மாட்சிமை 

 

"ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" - எபேசியர் 4:32

 

ஒரு ஆசிரியர் தனது மாணவர்களுக்கு, மன்னிக்கும் சுபாவத்தைக் கற்றுக் கொடுக்கும்படி ஒரு யுக்தியைக் கையாண்டார். அதின்படி எல்லா மாணவர்களும் ஒரு சாக்குப்பையில் உருளைக்கிழங்கும், உள்ளேயிருப்பது வெளியே தெரியும்படியான ஒரு பிளாஸ்டிக் பையையும் கொண்டுவரும்படிச் சொன்னார். யாரையெல்லாம் உங்களுக்கு மன்னிக்க முடியவில்லையோ அவர்களுடைய பெயர்களை ஒரு உருளைக்கிழங்கில் ஒரு பெயராக எழுதி பிளாஸ்டிக் பையில் போடுங்கள் என்று சொன்னார். அதின்படி சாக்குப்பையில் உருளைக்கிழங்கு குறைந்து, பிளாஸ்டிக் பையில் நிறையத் தொடங்கியது. இந்நிலையில் ஆசிரியர் தனது மாணவர்களிடம் உருளைக்கிழங்கில் பெயர் எழுதப்பட்ட ஒவ்வொருவரையும் நீங்கள் எப்பொழுது மன்னிக்கிறீர்களோ அப்பொழுது அந்த உருளைக்கிழங்கை நீங்கள் தூக்கி எறிந்து விடலாம். இல்லையென்றால் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த பெயர் எழுதப்பட்ட அனைத்து உருளைக்கிழங்கையும் தூக்கிக்கொண்டே செல்ல வேண்டும் என்று கூறினார். மன்னிக்க மனமில்லாத மாணவர்களின் பாரம் குறையவில்லை, அதோடு சிலநாட்கள் சென்றபின்பு அது அழுகி நாற்றமெடுக்க ஆரம்பித்தது. அதோடு இவர்கள் அருகில் வருபவர்கள் இவர்களை வெறுக்க ஆரம்பித்து விட்டனர். 

 

வேதத்தில் ஆதி. 34 - ம் அதிகாரத்தில் யாக்கோபின் மகள் தீனாள், சீகேமினால் தீட்டுப்பட்ட போது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன், லேவி தனது சகோதரியை திருமணம் செய்து கொடுத்த பிறகும் மன்னிக்க மனமில்லாமல், தன் தகப்பனின் சொல்லையும் மீறி சீகேமையும், பட்டணத்தாரையும் கொலை செய்ததினால் யாக்கோபு தன் குடும்பத்தை மனதில் வைத்து, அத்தேசத்தாரின் நிமித்தம் பயப்படும் சூழ்நிலை வந்தது.

 

பிரியமானவர்களே, நாம் ஒருவரை மன்னிக்கவில்லையென்றால் அது நம்மை உறுத்திக்கொண்டேயிருந்து, நாம் நிம்மதியற்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் தள்ளிவிடும். அதுவே நமக்கு மிகப்பெரிய பாரமாகவும், அதினிமித்தமாக எல்லோராலும் அருவருக்கத்தக்க நபராகவும் நாம் மாறிவிடுவோம். எப்படி தன் கணவரையும், தன் இரண்டு மகன்களையும் ஜீப்பில் எரித்துக் கொன்ற அந்த கயவர்களைக் கிரஹாம் ஸ்டெய்ன்ஸின் மனைவி மன்னித்தது போல, நாமும் இவ்வுலகில் நம்முடன் இணைந்து வாழும் நம் சகோதர சகோதரிகளை தேவன் கிறிஸ்துவுக்குள் நம்மை மன்னித்ததுபோல மன்னித்து, மன்னித்ததோடு நின்றுவிடாமல் அவர்களை ஆசீர்வதிப்போமானால் நிச்சயமாக அந்த ஆத்துமா இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும், அவர்களும் உங்களில் வாழும் இயேசுவைக் கண்டு அவரை மகிமைப்படுத்துவார்கள். தேசம் இயேசுவிடம் திரும்பும். ஆமென்! அல்லேலூயா!

- Sis. கெத்சியா குளோரி  

 

ஜெபக்குறிப்பு: 

தோழமை ஊழியர்களுக்காக அவர்கள் மூலம் சந்திக்கப்படும் கிராமங்களுக்காக ஜெபியுங்கள் .

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet