Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 21-06.2023
Share:

By Village Missionary Movement

Tuesday, 20-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 21-06.2023

 

தலைமைத்துவம் 

 

"…அவனோ காதுகேளாதவன் போல இருந்தான்" - 1 சாமு. 10:27

 

1877 ம் வருடத்தில் ஒருநாள் ஆலய ஆராதனையின் போது, கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறவர்கள் முன் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. ராட்னி ஸ்மித் என்கிற வாலிபர் முன்னே சென்றபோது "இவன் ஒரு நாடோடி" என்று யாரோ ஏளனமாக முணுமுணுத்தது அவர் காதில் விழுந்தது. ராட்னியின் பெற்றோரும் கல்வியறிவற்ற நாடோடிகள் தான். இந்த வாலிபர் பற்றி யாருமே பெரிதாக எண்ணவில்லை. ஆனால் தன்னைக் குறித்து தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டு என்பதை ராட்னி நிச்சயமாக அறிந்திருந்தார். ஒரு வேதாகமத்தையும் ஆங்கில அகராதியையும் வாங்கி வாசிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார். "இயேசுவிடம் செல்வதற்கான கேம்பிரிட்ஜிலும், ஹார்வர்டிலும் அல்லது கவிதைகளிலும் இல்லை. கல்வாரி என்கிற முற்கால மலையில்தான் உள்ளது" என்று இவர் ஒருமுறை சொன்னார். எல்லா தடைகளையும் தாண்டி ஒரு சுவிசேஷகரானார் ராட்னி. அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் அனேகரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தின தலைசிறந்த ஊழியராக காணப்பட்டார் சுவிசேஷகர் ராட்னி.

 

இன்றைய வேத பகுதியில் சவுல் இஸ்ரவேலருக்கு ராஜாவாக உயர்த்தப்பட்டதை 

பேலியாளின் மக்களாகிய சிலர் அங்கீகரிக்கவில்லை என்று வாசிக்கின்றோம். குறிப்பாக, இவனா நம்மை இரட்சிக்கப் போகிறான் என்று சவுல் காதுபட ஏளனமாக பேசுகிறார்கள். இதன் மத்தியில் சவுலோ காது கேளாதவன் போல் இருந்தான் என்று வாசிக்கிறோம். கிறிஸ்தவத்தின் தலைமைப் பண்புகளில் மிக முக்கியமாக காணப்பட வேண்டிய அம்சம் அநேக நேரங்களில் காது கேளாதது போன்று மவுனமாக இருப்பது சிறந்ததாக காணப்படுகிறது.

 

மத்தேயு 26:63 ல் வாசிக்கும் போது "இயேசுவோ பேசாமலிருந்தார்" என்று வாசிக்கிறோம். தமக்கு விரோதமாக சொல்லப்பட்ட கொடிய குற்றச்சாட்டுகளை குறித்து சற்றும் சலனமின்றி இயேசுவானவர் அமைதியாக காணப்பட்டார். தலைமைத்துவம் என்பது சிறப்பாக, நேர்த்தியாக, தெளிவாக பேசுவது மட்டுமல்ல, அவசியமற்ற அர்த்தமற்ற வார்த்தைகளை கவனியாமல் தனக்கு முன்பாக இருக்கும் வேலையில் கவனம் செலுத்தினாலே அது போதுமானது.

 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே, தலைமைத்துவ பண்புகளில் நீங்கள் பெருக வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகின்றார். நாம் மேலே வாசித்த இரண்டு சம்பவங்களை போன்று நம்முடைய வாழ்க்கையிலும் நிதானத்தை கடைபிடிப்போம் என்றால் நிச்சயமாக அது நமக்கு பலன் தரும். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

- Bro.ஜேக்கப் சங்கர் 

 

ஜெபக்குறிப்பு 

பணித்தள ஊழியங்களில் நம்மோடு இணைந்து ஊழியம் செய்யும் பகுதி நேர ஊழியர்கள் மற்றும் தன்னார்வ ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet