By Village Missionary Movement
Monday, 19-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 20-06.2023
குழுவாக இணைந்திருங்கள்
"அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக" - பிலிப்பியர் 2:4
ஒரு பெரிய கம்பெனியில் ஒரு முக்கியமான பதவிக்கான interview நடந்தது. அதற்கு 150 பேர் வந்திருந்தனர். அவர்களை 50, 50 பேராக மூன்று அறைகளில் உட்கார வைத்தனர். பின் ஒவ்வொருவருக்கும் ஒரு பலூன் கொடுக்கப்பட்டது. சிறுபிள்ளைகளுக்குப் போல் பலூன் தருகிறார்களே என நினைத்தனர். பின்பு 5 நிமிடத்திற்கு இந்த பலூன் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்றனர். இரண்டு அறைகளில் உள்ளவர்கள் பலூனை வைத்திருப்பவர்களுக்குத் தான் வேலை தருவார்கள் என நினைத்து மற்றவர்களின் பலூனை உடைக்க ஆரம்பித்தனர். மூன்றாவது அறையிலுள்ளவர்கள் 50 பேரும் பலூனை பத்திரமாக வைத்திருந்தனர். 5 நிமிடத்திற்கு பின் 150 பேரும் அழைக்கப்பட்டனர். பலூனை பத்திரமாக வைத்திருந்த 50 பேருக்கும் வேலை உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களிடம் அந்த மேனேஜர் மற்றவர்களுக்கு வேலை கிடைக்கக் கூடாது என நினைத்து அவர்கள் பலூனை உடைத்தீர்கள்.. இறுதியில் உங்களுக்கும் வேலை கிடைக்காமற் போனது. எங்கள் கம்பெனியில் Team work செய்ய தான் ஆட்கள் தேவை என்று சொல்லி அனுப்பினர்.
இந்நாட்களில் குழுவாக இணைந்திருப்பதை பார்ப்பதே கடினமாகி விட்டது. யாரை எப்போது காலை வாரி விடுவோம் என்று காத்திருப்பவர்கள் தான் அதிகம். வேதத்தில் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோர் பாபிலோனிற்கு சிறைபிடிக்கப்பட்டு சென்ற போது இவர்கள் 4 பேரும் ஒற்றுமையாக இணைந்து இருந்தனர். இராஜபோஜனத்தால் தீட்டுப்படக் கூடாது என்ற முடிவில் இணைந்து நின்று 10 மடங்கு சமர்த்தராய் காணப்பட்டனர். ராஜா கண்ட சொப்பனத்தையும், அர்த்தத்தையும் சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் கொலை செய்யப்பட வேண்டும் என்ற கட்டளை வந்த போது 4 பேரும் ஜெபித்தனர். தானியேலுக்கு சொப்பனம் வெளிப்படுத்தப்பட்டு தேசத்தில் உயர்த்தப்பட்டார். அப்போதும் தன் 3 நண்பர்களுக்காக ராஜாவிடம் வேண்டி, மாகாணத்து காரியங்களை விசாரிக்கும்படி அவர்களும் உயர்த்தப்பட்டனர். பிரசங்கியும் கூட, ஒண்டியாய் இருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம் என்று கூறுகிறார். சங்கீதகாரரும் சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது எனக் கூறுகிறார்.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவில் வளர வேதவாசிப்பும், ஜெபமும் எவ்வளவு முக்கியமோ அது போல பரிசுத்தவான்களோடு கூடிய ஐக்கியமும் முக்கியம். எப்படி தானியேலுக்கு நண்பர்களோடு உள்ள ஐக்கியம் உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் தந்ததோ அது போல நம் வளர்ச்சிக்கும் பரிசுத்தவான்களோடுள்ள ஐக்கியம் பலனளிக்கும். இதற்கு நாம் மனத்தாழ்மையாய் மற்றவர்களை நம்மை விட மேலானவர்களாக எண்ண வேண்டும். மேலும் பவுல் சொல்வது போல அன்பிலே அன்றி வேறொன்றிலும் கடன்படாமல் ஒருவர் பாரத்தை ஒருவர் ஏற்றுக்கொண்டு ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ண வேண்டும். ஆம், இணைந்து செயல்படுவோம். ஜெயம் பெறுவோம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு
நமது வளாகத்தில் நடைபெறும் மருத்துவப்பணிகளுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864