Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 19-06.2023
Share:

By Village Missionary Movement

Monday, 19-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 19-06.2023

 

வசந்தமான வசந்த காலம்   

 

"எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று 

ஜீவஊற்று புறப்படும்" - நீதி 4:23

 

ஒரு முறை சாதுசுந்தர் சிங் கங்கை நதியின் கரைக்குச் சென்றார். அங்கு இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நதியில் புனித நீராடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு இயேசு கிறிஸ்துவைப் பற்றி உரையாடினார். பலன் இல்லாததால் அவர்களோடு நதியில் இறங்கினார். தன் கரத்தில் இருந்த இரும்பு பெட்டியை அவர்கள் முன் திறந்து, தனது அழுக்கான ஆடைகளை பெட்டிக்குள் வைத்து பூட்டினார். பெட்டியை தண்ணீரில் முக்கி எடுத்து சோப்பு போட்டார். என்ன செய்கிறாய்! என்றவர்களிடம் சட்டையை அழுக்கு நீங்க துவைக்கிறேன் என்றார்!. எல்லோரும் சிரித்தனர். பெட்டிக்குள் இருக்கும் சட்டைக்கு பெட்டியில் சோப்பு போட்டால் எப்படி அழுக்கு போகும்? சட்டையில் அல்லவா சோப்பு போட வேண்டும் என்றனர்! சாது, உங்கள் ஆத்துமாவில் உள்ள பாவக்கறைகளுக்கு நதியின் தண்ணீர் ஒன்றும் செய்யாது. உங்கள் சரீர அழுக்கை வேண்டுமானால் போக்கும். உங்கள் ஆத்மா சுத்தமாக இயேசு என்ற தெய்வம் சிலுவையில் ரத்தம் சிந்தினார். அவரின் ரத்தத்தால் உங்கள் பாவங்கள் நீங்கி உள்ளம் புனிதமாகும். உங்களுக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும் என்றார். அந்த நதிக்கரையில் அநேகர் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை குறித்து சிந்திக்க ஆரம்பித்தனர். ஆம், இன்றளவும் நமது இந்திய தேசம் பல கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களுக்குள் சிக்குண்டு கிடக்கிறது. சந்தோஷத்தையும் சமாதானத்தையும் திருப்தியையும் தேடித் திரியும் மக்கள் ஏதாவது ஒன்றை செய்து அதனைப் பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களின் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டுமானால் சுவிசேஷம் ஒன்றே வழி!

 

இந்த உலகத்தில் மனிதனுடைய மனதிற்கு சற்று நேரம் சந்தோஷத்தையும், குதூகலத்தையும் அளிப்பதற்கு ஏராளமான காரியங்கள் உண்டு. எவ்வளவுக்கதிகமாக நீங்கள் இந்த உலகப் பிரகாரமான காரியங்களை நாடிச் செல்கிறீர்களோ அந்த அளவிற்கு அது "இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்" என்று தாகத்தையே உருவாக்கும். எனவே, ஒருபோதும் நீங்கள் உலக சந்தோஷங்களால் திருப்தி அடையவே முடியாது. இதுவே உண்மை. 

 

ஆனால், இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையிலே பாடுபட்டு சம்பாதித்த இவ்வளவு பெரிதான இரட்சிப்பை குறித்து நாம் கவலையற்று இருக்கலாமா? அவர் தரும் சந்தோஷம், சமாதானம், நம்பிக்கை என்றும் இருதயத்தில் சுரந்து கொண்டேயிருக்கும். 

- S. பெர்லின் செல்லாபாய்.

 

ஜெபக்குறிப்பு:   

நமது அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al