Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18-06.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 17-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 18-06.2023 (Kids Special)

 

தம்பிக்காக உயிரை விட்ட அண்ணன் 

 

"…நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” - கலாத்தியர் 1:4

 

ராமு, சோமு என்ற இரு மகன்களையும் செல்லமாக வளர்த்து வந்தார் அவர்களது தந்தை துரை. சிறுவயதில் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து செல்லமாக வளர்ந்து வந்த பிள்ளைகள் வாலிபர்களாக மாறியதும் தன் இஷ்டம் போல் வாழ ஆரம்பித்தனர். மூத்தமகன் ராமு அவ்வப்போது தனது தகப்பனாருக்கு கீழ்ப்படிந்து வந்தான். இளையவனோ கெட்ட நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களோடு சுற்றி திரிவான். இது அவனுடைய தகப்பனாருக்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஒருநாள் வழக்கம் போல காலேஜ் சென்ற சோமு தன்னுடன் படிக்கும் மற்ற மாணவனுடன் வம்பு சண்டை இழுத்து அவனுடைய மண்டையை உடைத்து விட்டான். இந்த செய்தி அவன் அப்பா துரையின் காதில் எட்டவே அவருக்கு சோமு மீது இன்னும் அதிக கோபம் மற்றும் வெறுப்பு வந்தது. காலேஜ் முடித்து வீட்டிற்கு வந்த சோமுவை திட்டிவிட்டு, "நீ என் மகனே இல்லை, வீட்டை விட்டு போ" என்று சொன்னார். இவனும் சந்தோஷமாக நான் போகிறேன் என்று கிளம்பி தன் தீய நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி கொள்ளையனாய் மாறினான். நாட்கள் கடந்தன. தகப்பனாருக்கு சோமுவை பற்றிய ஞாபகம் அதிகமாக வரவே அவனைக்குறித்து மிகவும் கவலைப்பட்டார். தகப்பன் கவலையோடு இருப்பதை கண்ட மூத்த மகன் ராமு தகப்பனிடம் சென்று அப்பா, தம்பி திருந்தி வீட்டிற்கு வந்தால் அவனை ஏற்றுக் கொள்வீர்களா? என்றான். தகப்பனாரும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன். அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என்றார். பின்பு அவர் தன் வேலைக்காரர்களிடம் சென்று என்னை விட நீங்கள் சோமுவிடம் தான் மிகவும் பாசமாக இருந்தீர்கள். நான் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறேன் என்று அவனிடம் சொல்லி வருவீர்களா? என்றார். உடனே வேலையாட்கள் சோமு இருப்பதோ கொள்ளையர்களிடம், அவனை பார்க்க இரவில் தான் செல்லமுடியும். அப்படி அங்கு சென்றாலும் உயிருடன் வருவது கடினம் என்று சொல்லி மறுத்துவிட்டனர். உடனே ராமு நான் போகிறேன் அப்பா என்று சொல்லி இரவு கிளம்பினான். அப்பொழுது சோமு இவனையும் அடித்து இவன் கையில் வைத்திருக்கிற பையையும் பறித்தான். சோமு அப்பொழுது ராமு தம்பியிடம், "அப்பா உன்னை ஏற்றுக்கொள்ள ஆசையாயிருக்கிறார். நீ மனம் திரும்பி வீட்டிற்கு போ" என்று சொல்லிவிட்டு மரித்துவிட்டான். உடனே சோமு இப்படி அநியாயமாய் அண்ணணை அடித்து கொன்றுவிட்டோமே என்று எண்ணி மனம் உடைந்து தனது தவறை உணர்ந்து மனம் மாறி தனது வீட்டிற்கு சென்றான். தந்தையும் மகிழ்ச்சியோடு தனது மகனை ஏற்றுக் கொண்டார்.

 

அன்பான தம்பி தங்கச்சி ,அதுபோலத்தான் இயேசப்பாவும் நமது பாவங்களுக்காக இந்த பூமிக்கு வந்து தனது ஜீவனை கொடுத்து நம்மை மீட்டுக் கொண்டார்.

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler online casino online casino Piabet Piabet Giriş Ngsbahis Ngsbahis Giriş İnterbahis İnterbahis Giriş Klasbahis Klasbahis Giriş Coinbar Coinbar Giriş Limanbet Limanbet Giriş İmajbet İmajbet Giriş Restbet Restbet Giriş Matbet Matbet Giriş Jasminbet Jasminbet Giriş Belugabahis Belugabahis Giriş Online casino nz Best payout online casino nz jojobet jojobet giriş jojobet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş perabet perabet giriş perabet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş Meritking Perabet Holiganbet jojobet jojobet giriş jojobet güncel giriş bahsegel bahsegel bahsegel bahsegel bahsegel perabet perabet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş holiganbet holiganbet giriş belugabahis matbet romabet alobet alobet giriş bahissenin bahissenin giriş bayconticasino bayconticasino giriş atlasbet atlasbet giriş betcio betcio giriş grandpashabet grandpashabet giriş marsbahis marsbahis giriş matbet matbet giriş nakitbahis nakitbahis giriş pashagaming pashagaming giriş Meritking Meritking giriş imajbet imajbet giriş İmajbet Prizmabet Yakabet Betsat Betnano Restbet Perabet Perabet Giriş Perabet Güncel Giriş Cratosroyalbet