Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17-06.2023
Share:

By Village Missionary Movement

Saturday, 17-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 17-06.2023

 

முத்துக்களாக மாற்றுங்கள் 

 

"...ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது…" - வெளி 21:21 

 

கடலின் ஆழத்தில் முத்து எவ்வாறு உருவாகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? சிப்பிக்குள் ஒரு மண் துகள் சென்று விடுகிறது. இந்த சிறிய துகள் அந்த சிப்பிக்குள் இருக்கும் மென்மையான உயிரினத்திற்கு நெருடலை உண்டு பண்ணுகிறது. சிப்பிக்குள் உள்ள உயிரி "இது ஏன் எனக்கு நடக்க வேண்டும்?" என்று கேட்காமல் பொறுமையாகவும், மிகுந்த கவனத்துடனும் அந்த நெருடுகிற மணல் துகள்களைச் சுற்றி பால் போன்று ஒரு கூழை ஊற்றி, அந்தத் துகளின் கரடுமுரடான மூலைகளை எல்லாம் மென்மையாக மூடுகிறது. அதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு முத்தாக மாறுகிறது. அந்த சிப்பியானது தன்னைக் காயப்படுத்தின மணல் துகள்களை முத்துக்களாக மாற்ற கற்றுக் கொண்டு விட்டது. 

 

புதிய எருசலேம் நகரின் ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது என்று சொல்லும் போது, அது வெறும் முத்து என்ற ஒரு பொருளை மட்டும் குறிப்பிடவில்லை. இவ்வுலகில் பிறரது காயம் ஆற்றப்பட பிரயாசப்பட்டவர்கள், தங்களைக் காயப்படுத்தினவர்களை மன்னித்தவர்கள். இந்த முத்துவாசலின் வழியாக கடந்து தேவனுடைய நகரத்திற்குள்ளே செல்வார்கள்.

 

பிரியமானவர்களே! உங்கள் துக்கங்களையும் முத்துக்களாக மாற்ற தேவனுடைய உதவியை நாடுங்கள். இந்த உலகத்தைப் படைத்த தேவன் இந்த உலகத்தில் இருந்திருக்கிறார். அவர் . . . துக்கம் நிறைந்தவரும், பாடு அனுபவித்தவருமாயிருந்தார். (ஏசாயா. 53: 3) காயப்படுதல், துக்கம், வெறுமை, நிராதரவு, ஏமாற்றம் என்று நமது போராட்டங்கள் என்னவாக இருந்தாலும் அதே இடத்தில் இருந்து நீங்கள் இயேசுவின் குரலைக் கேட்க முடியும். எனவே, திடன் கொள்ளுங்கள்!

 

இயேசு கிறிஸ்து எப்போதும் நித்தியத்தின் மேல் கண்களைப் பதித்தே வாழ்ந்தார். நாமும் கூட தேவன் மேல் நம்பிக்கை வைத்து, நித்தியம் வரையிலும் நமது பிரச்சனைகளுக்குக் காரணம் கேட்காமல், கற்றுக்கொண்டுவாழ பிரயாசப்படுவோமா? தம்மை நமக்காகத் தந்து, இவ்வளவாய் அன்பு கூர்ந்த தேவனிடம் நம்மை அர்ப்பணிப்போம். அப்போது நித்தியத்தின் வெளிச்சத்தில் வாழ, நமது துக்கங்களையும் முத்தாக மாற்றக் கற்றுக் கொடுப்பார். அந்த வாசலின் வழியாக அநேகருடன் நாமும் உட்பிரவேசித்து சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் அடைவோம்! ஆமென்.

- Sis. பியூலா 

 

ஜெபக்குறிப்பு: 

ஆமென் வில்லேஜ் டிவி சேனலுக்காக, அதின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al