Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15-06.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 14-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 15-06.2023

 

சோதனையின் விளைவுகள் 

 

"அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்" – 1 பேதுரு 5:7

 

கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும் இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாய் இருக்கிற பேதுரு மேற்கண்ட புத்திமதியை எழுதுகிறார். யோபுவும் தன் சோதனை நேரங்களில் தேவனைத் தூஷியாதபடி அவரையே நோக்கிப் பார்த்து, தன் பாரங்களை அவர் மேல் வைத்துவிட்டு, "என் மீட்பர் உயிரோடிருக்கிறார்..." (யோபு 19:25) என்று தைரியமாய் விசுவாசத்தோடு சொல்கிறார். முதலாவது அவர் சந்தித்தது, தன் பிள்ளைகள், சொத்துக்களின் இழப்பு. இரண்டாவது, தன் மனைவி, "தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்" என்று சொன்ன, வேதனைப்படுத்தும் அவிசுவாச வார்த்தைகள். மூன்றாவது, அவன் தன்னைத் தானே புதிதாக தேவனுக்கு அர்ப்பணித்தது. "...இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை." சமுதாயப் புறக்கணிப்பு, நல்ல நிலையில் இருந்து மோசமான நிலைமை, இவைகள் எதுவும் யோபுவின் ஆத்துமாவை சேதப்படுத்த முடியவில்லை. மாறாக, தன்னை புதிதாகத் தேவனிடம் அர்ப்பணித்து பொறுமையோடு காத்திருந்தார். இதன் விளைவாக யோபு, நாற்பத்திரண்டாம் அதிகாரத்தில், இரட்டிப்பான ஆசீர்வாதத்தையும், நான்கு தலைமுறைப் பிள்ளைகளைக் காணவும், பூரண ஆயுசு உள்ளவராக மரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றார். யோபுவின் பொறுமையைக் குறித்து யாக்கோபு 5: 11 ல் வாசிக்கிறோம். 

 

இயேசுவோ நீடிய பொறுமை உள்ளவராய் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற சித்தமுள்ளவராய் சிலுவையில் மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தினார். நமது பாவங்களுக்காக, மீறுதல்களுக்காக, அக்கிரமங்களுக்காக மரிக்கவும் நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினையை அடையவும் அவர் சித்தம் கொண்டார். பிசாசினால் சோதிக்கப்பட்டார்; ஜெப ஆலயத் தலைவர்களாலும், பிரதான ஆசாரியர்களாலும், சதுசேயர் பரிசேயர்களாலும், யூத ஜனக் கூட்டத்தாலும் நிந்திக்கப்பட்டு, பரிகசிக்கப்பட்டு, அசட்டை பண்ணப்பட்டவராக இருந்தார். எந்தப் பாவமும் அறியாத அவர், சிலுவையைச் சகிக்கத் தன்னை ஒப்புக்கொடுத்தார். இதன் விளைவாக அவர் இரத்தத்தால் நம் பாவங்களிலிருந்து நாம் விடுதலை பெறுகிறோம்; அவர் நாமத்தினால் சுகம், பெலன், ஆரோக்கியம் கிடைக்கிறது; அவர் உயிர்த்தெழுதலினால் நமக்கு நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது. நித்திய தேவனிடம் சேரும் வரை, கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்போம். மாரநாதா! இயேசு சீக்கிரம் வருகிறார்.

- Mrs.ஜெயந்தி பாக்கியநாதன்.

 

ஜெபக்குறிப்பு: 

ஏழாயிரம் மிஷனெரிகள் ஒரு லட்சம் கிராமங்கள் என்ற இலக்கினை அடைய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al