Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  13-03-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 13-Mar-2021

இன்றைய தியானம்(Tamil)  13-03-2021

அற்புதம் 

“...தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.” – அப். 10:38

இலங்கை தேசத்தில் வாழ்ந்துவந்த ஒரு சகோதரிக்கு 6 மாதங்களாக இருகால்களும் நடக்க முடியாமல் போய்விட்டது. அவர்கள் அம்மா ஒரு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்பொழுது அங்குள்ள ஊழியர் ஜெபம் செய்தார்கள். அந்த சகோதரி “கால் எரிகிறது, எரிகிறது” என்று கத்தினார்கள். அவர்களுக்கு அந்த ஊழியர் ஊக்கமாக ஜெபம் செய்தார்கள். இயேசு அற்புதம் செய்வார் என்று சொல்லி அவர்கள் கையை பிடித்து தூக்கி நடக்க வைத்தார்கள். என்ன ஆச்சரியம்!  “6 மாதங்களாய் நடக்க முடியாமல் இருந்தேன். இப்பொழுதோ இயேசுவின் நாமத்தினால் நடக்கிறேன்” என்று அந்த சகோதரி சாட்சி கூறினார்கள். 

இதைப்போல் நாம் இன்று அப்போஸ்தலர் 3ம் அதிகாரத்தில் ஒரு நபரை காணலாம். தன்னுடைய தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாகப் பிறந்த ஒருவன் இருந்தான். அவனைப் பார்க்கும்போதெல்லாம் அவர்கள் பெற்றோருக்கு மிகவும் கஷ்டமாக இருந்திருக்கலாம். ஏனென்றால் 40 வயதான தன்னுடைய பிள்ளையை தினம் தோறும் சுமந்து கொண்டு தன்னுடைய ஊரில் இருக்கிற தேவாலயத்திற்கு முன்பாக வைத்து பிச்சை எடுக்க வைப்பார்கள். 

ஒருநாள் அந்த வழியாக ஆலயத்திற்கு வந்து கொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டான். அப்பொழுது பேதுருவும் யோவானும் அவனை உற்றுப் பார்த்து எங்களை நோக்கிப்பார் என்று சொன்னார்கள். அப்பொழுது அவன் அவர்களிடத்தில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஏதாவது கிடைக்கும் என்று எண்ணி அவர்களை நோக்கிப் பார்த்தான். அப்பொழுது பேதுருவும், யோவானும் எங்களிடத்தில் பொன்னும் இல்லை, வெள்ளியும் இல்லை, என்னிடத்திலுள்ளதை உனக்கு தருகிறேன் என்று சொல்லி அவனுடைய கையைப்பிடித்து தூக்கிவிட்டு “இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட” என்று சொன்னார்கள். உடனே அவன் நடந்து அவர்களோடு தேவாலயத்திற்கு சென்றான். 

ஆம், எனக்கன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் நாமம் ஒரு சாதாரண நாமம் அல்ல, இயேசுவின் நாமத்தில் அற்புதங்கள் நடக்கும். நாம் இயேசுவின் நாமத்தில் பிணியாளிகளுக்காக ஜெபிக்கும்போது அற்புதம் நிச்சயமாக நடக்கும். அற்புதத்தைப் பெற்றுக் கொள்கிறவர்கள் தாமாகவே ஆலயத்திற்கு வருவார்கள், ஆண்டவரை பின்பற்றுவார்கள். ஆகவே வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க கிடைக்கும் தருணங்களை பயன்படுத்தி விசுவாசத்தோடு ஜெபிப்போம். தேவன் சுகம் தருவார். அநேகர் இயேசுவண்டை சேர்க்கப்படுவார்கள், ஆமென்! 
-    Mrs. ரூபி அருண் 

ஜெபக்குறிப்பு:
1 லட்சம் கிராமங்களை தத்தெடுக்கும் 1 லட்சம் நபர்கள் எழும்ப ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş matbet giriş matbet matbet giriş sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş realbahis realbahis giriş casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet esbet amgbahis betpuan grandpashabet sonbahis mercurecasino betplay cratosroyalbet grandpashabet grandpashabet casibom marsbahis grandpashabet casibom jojobet jojobet casibom superbetin superbetin giriş marsbahis marsbahis giriş almanbahis almanbahis giriş amgbahis amgbahis giriş betasus betasus giriş betmartin betmartin giriş betoffice betoffice giriş jojobet jojobet giriş betpas betpas giriş betsat betsat giriş betsmove betsmove giriş egebet egebet giriş galabet galabet giriş grandpashabet grandpashabet giriş hiltonbet hiltonbet giriş holiganbet holiganbet giriş jasminbet jasminbet giriş kareasbet kareasbet giriş kargabet kargabet giriş kavbet kavbet giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş norabahis norabahis giriş pashagaming pashagaming giriş perabet perabet giriş piabellacasino piabellacasino giriş tarafbet tarafbet giriş winxbet winxbet giriş supertotobet supertotobet giriş atlasbet atlasbet giriş