Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 14-06.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 14-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 14-06.2023

 

ஓர் அற்புத சாட்சி 

 

"…மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்;…” - யோவேல் 2:28 

 

சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு ஏழை விதவைத் தாய், தனக்கு மூன்று பிள்ளைகள் இருந்தும் தன் எட்டு வயது பேத்தியுடன் தனித்து வசித்து வருகிறார்கள். அந்தத் தாய் அதிகமாக வேதத்தை இருந்தும் மிகவும் கருத்தாக உபவாசித்து, பாரத்தோடு ஜெபிக்கிறவர்கள். ஒவ்வொரு நாளும் தேவனை தேடுபவர்கள், ஒழுங்காக ஞாயிறு தோறும் ஆலயம் செல்பவர்கள். வசனத்தை கருத்தாய் கேட்டு தன் இருதயத்தில் வைத்து தன் பேத்திக்கு போதிப்பவர்கள். அவளை ஊழியத்திற்கு என்று அர்ப்பணித்து தன் சொற்ப வருமானத்தில் அவளைப் படிக்க வைத்து, பக்தியாக வளர்த்து வருகிறார்கள். அவளும் தன் பாட்டியின் விருப்பப்படி தேவனுக்கு பிரியமான பிள்ளையாக வளர்ந்து வருகிறாள்.  

 

அந்த தாய் தனியாக வீட்டில் இருப்பதால் தன் வீட்டின் நடுவில் ஒரு நாற்காலியை போட்டு அதில் இயேசு அமர்ந்திருப்பதாகவும் வேதத்தின்படி "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." (யோசுவா 1:5) என்ற வசனத்தின்படி தன்னை திடப்படுத்திக் கொண்டு தன் பேத்திக்கும் போதித்து வந்தார்கள். தேவனாகிய கர்த்தரும் தம் பரிபூரண பிரசன்னத்தால் அவர்களை நிறைத்து பாதுகாத்து வருகிறார். சென்ற வாரத்தில் ஒருநாள் மாலை பொழுது அவர்கள் இருவரும் ஜெபித்துக் கொண்டு இருந்த நிலையில் அவர்களுடைய பேத்தி கண்களைத் திறந்து பார்த்த பொழுது என்ன ஆச்சரியம்! கர்த்தராகிய இயேசு தாமே அவர்கள் வைத்திருந்த நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதை கண்டார்கள். நேசருடைய கைகளும், கால்களும் மிகத் தெளிவாக தெரிந்தது. அவரது உடல் முழுவதும் ஒரு ஆவியைப் போல காட்சியளித்தது. அந்தப்பிள்ளை அதை கண்ட பொழுது சந்தோஷத்துடன் கூடிய பயத்தினால் தன் பாட்டியை அணைத்துக் கொண்டாள்.  

 

கடைசி நாட்களில், ". . . உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள் . . . தரிசனங்களையும் காண்பார்கள்" என்று யோவேல் 2:28 இல் வாசிக்கிறபடி நடந்தது. கர்த்தர் தாமே தம் பிள்ளைகளுக்கு அரணும் கோட்டையும் ஆதரவாயும் இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆம், நம் தேவன் நம்மோடு இருக்கிறவர், நம் ஜெபத்தைக் கேட்கிறவர். ஆகவே எதைக் குறித்தும் கலங்காதீர்கள்.

- Mr. பாக்கியநாதன்.  

 

ஜெபக்குறிப்பு:

மோட்சப்பயணம், கண்மணியே கேள், யோசுவாவே எழும்பு, கழுதைகள் கையேடு போன்ற பத்திரிக்கை ஊழியங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al