Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12-06.2023
Share:

By Village Missionary Movement

Monday, 12-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 12-06.2023

 

பெரிய காரியம் செய்திடுவார் 

 

"ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" - யோபு 9:10  

 

என் பெயர் ஸ்டீபன். நான் ஒரு பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் கடமைக்குத் தான் சபைக்கு செல்வேன். எனக்கு சினிமா ஸ்டார் ஆகணும் என்ற ஆசை இருந்தது, படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தேன். வகுப்பில் நான் கடைசியாகத் தான் உட்கார்ந்து இருப்பேன். எல்லாரும் என்னை அவமானப்படுத்தினார்கள். இப்படியே என்னுடைய வாழ்க்கை சென்றது. ஒவ்வொரு வகுப்பாக கடந்து நான் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும், முடிந்த அளவு படித்து, எழுதி முடித்தேன். Result-க்காக காத்திருந்தேன். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நாளைக்கு Result என்றால் இன்று இரவு வீட்டை விட்டு தற்கொலை செய்து கொள்ள புறப்பட்டு போனேன்.

 

விஷப் பாட்டில், கத்தி ஆகிய இரண்டையும் எடுத்துக் கொண்டு போனேன். கடைசியாக நான் முட்டிப்போட்டு கத்தியையும், விஷ பாட்டிலையும் எனது இரண்டு கைகளிலேயும் வைத்துக் கொண்டு ஜெபம் பண்ணிவிட்டு சாகலாம் என்று எண்ணினேன். ஜெபிக்கும் போது எனக்குள் ஒரு தெளிவான சத்தம், "நாளைக்கு Result-ஐ பார்த்துவிட்டு பின்னர் முடிவெடு" என்று. நானும் "சரி நாளைக்கு சாகலாம்" என்று வீட்டுக்கு போனேன். அடுத்த நாள் மிகவும் பயத்தோடு Result-க்காக காத்திருந்தேன். நான் தான் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் என்று தகவல் வந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் இதுதான் உண்மை. முதல் மதிப்பெண் எடுக்க வாய்ப்பேயில்லாத என்னை இயேசப்பா முதல் மதிப்பெண் எடுக்க வைத்தார்.

 

தாவீதை அவரது குடும்பத்தில் எல்லாரும் அற்பமாக எண்ணினார்கள். ஆனால் தேவன் கோலியாத்தை முறியடிக்க தாவீதைத்தான் பயன்படுத்தினார். நீங்களும் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு அற்பமாய் எண்ணப்பட்டு காணப்படுகிறீர்களா? தாவீதை உயர்த்தின தேவன், என்னை உயர்த்தின தேவன், உங்களையும் உயர்த்துவார். இப்பொழுது நான் ஆண்டவருடைய ஊழியத்தை செய்து வருகிறேன். 

 

ஆம், எவரையும் உயர்த்த அவராலே ஆகும். அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறவர், உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயம் செய்வார். அல்லேலூயா.

- S.J. ஸ்டீபன்  

 

ஜெபக்குறிப்பு: 

Child Care Centre எனும் திட்டத்தின் மூலம் அநேக சிறுபிள்ளைகள் ஆதரிக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al