By Village Missionary Movement
Saturday, 10-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 10-06.2023
எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள்
"சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்…" - லூக்கா 18:1
தேவன் சோர்ந்து போகிறவனுக்கு பெலன் கொடுக்கிறவர். சோர்ந்து போன இருவருடன் தேவன் பேசுகிறார். எலியாவிடம் சொல்கிறார், "பாகால் முன்பாக முடங்காத 7000 பேரை காப்பாற்றி வருகிறேன்" என்று, எலியாவின் மேல் உள்ள திட்டத்தையும் கூறுகிறார். எலியா சோர்வை அகற்றி பெலன் பெற்று தேவ திட்டத்தை செய்ய முன்வருகிறார். யோனாவுடனும் தேவன் பேசினார். அவர் சோர்வு நீங்கினதைப் பற்றி நமக்குத் தெரியவில்லை. ஆம், தேவ பிள்ளைகளே, நாமும் கூட சோர்ந்து போகிற போதெல்லாம் தேவன் தம் வார்த்தை மூலம் தேவ பிள்ளைகள் மூலம் நம்முடன் பேசுகிறார். அதற்கு நாம் செவி சாய்க்கும் போது தேவ பெலனால் நிரப்பப்பட்டு தேவனுக்காய் செயல்பட ஆரம்பித்து விடுவோம்.
அநேக நேரங்களிலே நாம் ஜெபத்திலே சோர்ந்து விடுகிறோம். லெந்து காலங்களில் அதிகமாக ஜெபிக்கிறோம், உபவாசிக்கிறோம், ஆலயத்திற்கு செல்கிறோம். 40 நாட்கள் முடிந்ததும் இவையெல்லாம் குறைந்து விடுகிறது. இதற்குக் காரணம் ஒரு வித திருப்தி. 40 நாட்கள் ஜெபித்ததும் எதையோ சாதித்து விட்டோம் என்று எண்ணுகிறோம். ஆனால் மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக இருக்க, எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்கிறார். நம் ஓட்டம் முடியும் வரை ஜெபிக்க வேண்டும்.
ஜெபத்தில் சோர்வு வரும் என்பதால்தான் "சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபியுங்கள்" என்று வேதம் நமக்கு ஆலோசனை கூறுகிறது. நம்முடைய ஜெபத்திற்கு பதில் வர தாமதிக்கும் போது, பல ஆண்டுகளாய் சில நன்மைக்காக காத்திருக்கும் போது, தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களெல்லாம் அமைதியாய் இருப்பது போல தோன்றும் போது . . . நம் சோர்வு அதிகமாகிறது. ஆனால் ஆண்டவர் இன்றைய வேத பகுதி மூலம் சொல்லும் காரியம் "ஜெபத்தில் ஒரு நாளும் சோர்ந்து போகாதே. உன் ஜெபத்திற்கு நிச்சயம் பதிலுண்டு ஏற்ற காலத்தில் நான் பதில் செய்வேன்" என்கிறார்.
இதை வாசிக்கும் அன்பரே! நீங்களும் கூட சோர்ந்து போய் ஜெபத்தை நிறுத்திவிட மனதாயிருக்கிறீர்களோ? "இல்லை" என் ஜெபம் கேட்கப்படவில்லை என அவிசுவாசித்து சோர்ந்து போய்விட்டீர்களோ? இதன் மூலம் தேவன் உங்களோடு பேசுகிறார். நீங்கள் எப்பொழுதும் ஜெபிக்க வேண்டும் என்பது தான் அவர் விருப்பம். நீங்கள் கேட்கும் காரியங்கள் சர்வ வல்லவருக்கு முன் எளிதான காரியம். ஏற்ற சமயம் வரும் போது தம் சித்தம்படி நடத்துவார். அவர் சித்தம் எப்போதும் பெரியவைகளாக, நன்மையானதாக இருக்கும். இன்று இடைவிடாமல் எப்பொழுதும ஜெபிக்க முடிவெடுப்போம். செயல்படுவோம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்.
ஜெபக்குறிப்பு:
சுகமளிக்கும் ஆராதனை நேரலையின் மூலம் அநேக அற்புத அடையாளங்கள் நடைபெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864