Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08-06.2023
Share:

By Village Missionary Movement

Thursday, 08-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 08-06.2023

 

சுவரில் எழுதின கைவிரல்கள்

 

"அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமணையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று;...“ - தானி 5:5

 

இன்றைய வேதபகுதியில் கைவிரல்கள் சுவற்றில் எழுதியதை பெல்ஷாத்சார் என்று ராஜா கண்டபொழுது கலங்கினான். அவன் கால்கள் நடுக்கங்கொண்டது. ஆயிரம் பேருக்கு அதிகமானோர் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். எழுத்து எல்லோரும் காணும்படியாக எழுதப்பட்டிருந்தது. வழக்கம்போல் ஞானிகள், ஜோசியர், குறிசொல்லுகிறவர்கள் வரவழைக்கப்பட்டனர். அர்த்தம் சொல்ல கேட்கப்பட்டனர். ஆனால் அந்த எழுத்தை யாராலும் வாசிக்கவும் முடியவில்லை, அர்த்தமும் சொல்லமுடியவில்லை. 

 

தானியேல் வரவழைக்கப்பட்டார். அப்பொழுது அவன் இந்த எழுத்துக்கள் ஏன் எழுதப்பப்பட்டது? அதன் அர்த்தம் என்ன? என்று விளக்கினார். இந்தக் கைவிரல் எழுத்துக்களை தேவன் அனுப்பின குறுந்தகவல் (S.M.S) என்று சொல்லலாம். மெனே, மெனே, தெக்கேல் உப்பார்சின் என்னும் நான்கே வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. அதில் மெனே, மெனே என்ற வார்த்தை இரண்டு முறை எழுதப்பட்டிருந்தது. எழுதக் காரணங்கள் என்? முதலாவது, இதையெல்லாம் அறிந்திருந்தும் அவர் தன் இருதயத்தை தாழ்த்தாமல் பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக தன்னை உயர்த்தினார். இரண்டாவது தேவனுக்குக் கொடுக்க வேண்டிய கனத்தையும், மரியாதையையும், கொடாமல் தேவனுடைய ஆலயப் பொருட்களை அற்பமாய் உபயோகப்படுத்தினார். ராஜா தராசில் நிறுக்கப்பட்ட போது குறையக் காணப்பட்டார். 

 

ஆம், இன்றும் அதே ஆண்டவர் உங்களையும், என்னையும் நிறுத்துப்பார்க்கிறார். நமது சிந்தனை, செயல், நோக்கம் அனைத்தையும் நிறுத்துப்பார்க்கிறார். பெருமை எப்பொழுதும் தேவனுக்கு எதிரானது. பெருமையோடிருப்போமானால் இன்றே சிநிதித்துப் பார்ப்போம். நமக்கும் மெனே, மெனே, தெக்கேல் உப்பார்சின் என்ற S.M.S வந்துள்ளதா என செக் பண்ணிக் கொள்வோம். கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுவோம். அப்பொழுது அவர் நம்மை உயர்த்துவார்.

 

ஜெபக்குறிப்பு:

டியூசன் சென்டர் ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படும் மாணவர்களின் எதிர்காலத்திற்காக ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al