Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 07-06.2023
Share:

By Village Missionary Movement

Wednesday, 07-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 07-06.2023

 

விடாமுயற்சி 

 

"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, ..." - 2 கொரி. 2:14

 

 ஒருமுறை ஒரு T. shirt வாங்குவதற்கு பல கடைகள் ஏறி இறங்கிய எனக்கு எதிர்பார்த்த ரகத்தில் கிடைக்கவில்லை. ஒவ்வொரு கடைக்காரரும் நீ கேட்கிற அந்த ரகம் கிடைக்காது. தற்போது இதுதான் எங்கும் கிடைக்கும் என்றனர். எனவே அவர்கள் காண்பித்த ரகத்தில் ஒன்றை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று எண்ணினேன். ஆயினும் இன்னும் சில கடைகளில் விசாரிக்க விரும்பினேன். கடைசியில் ஒரு கடையில் நான் விரும்பின டி-சர்ட் கிடைத்தது. இது ஒரு சாதாரண காரியமாயிருக்கலாம்.

 

வெற்றியை எதிர்பார்த்து செல்லும் நமக்கு பல நிலைகளில் கிடைப்பது தோல்வியாக இருக்கலாம். மோசே பார்வோனிடம் வெற்றியை எதிர்பார்த்து சென்றபோது அவருக்கு 9 முறை தோல்விதான் கிடைத்தது. ஆனாலும் தேவன் மோசேயிடம் திரும்ப திரும்ப செல்ல ஏவினார். முடிவில் 10வது முறை வெற்றி கிடைத்தது. தேவன் மோசேயின் மூலமாக மொத்த இஸ்ரவேல் ஜனங்களுக்கும் வெற்றியை தந்தார். அதுபோல அமெரிக்க வரலாற்றில் ஆபிரகாம் லிங்கன் மிகவும் முக்கியமானவர். ஆனால் அவருடைய வாழ்க்கைப் பாதையில் திரும்ப திரும்ப தோல்விகளை மட்டுமே சந்தித்தார். ஆயினும் ஆபிரகாம் லிங்கன் "இவ்வளவுதான் இதற்குமேல் வாய்ப்பில்லை" என்று நின்றுவிடவில்லை. இறுதியில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்தார். 

 

நாமும் நம்முடைய வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ தோல்விகளை சந்தித்திருக்கலாம். தோல்வியோடு வாழவேண்டியதுதான் என்று இஸ்ரவேல் ஜனங்களைப் போல சோர்வடைந்து வாழ்ந்து கொண்டிருக்கலாம். மேற்படிப்பிற்கான தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் சகோதர, சகோதரிகளே, நான் எதிர்பார்க்கிற நல்ல மதிப்பெண் கிடைக்குமா? கிடைக்காதா? என்று புலம்பிக் கொண்டிருக்கிறாயோ? இனி வெற்றியே இல்லை என்று நீ முடிவு செய்து சும்மாயிருந்து விடக்கூடாது. வெற்றி கிடைக்கும் வரை மோசேயைப்போல, ஆபிரகாம் லிங்கனைப் போல விடாமல் முயற்சி செய்துகொண்டிருக்க வேண்டும். தேவனைச் சார்ந்து வாக்குத்தத்தங்களை பிடித்துக் கொண்டு போராடுங்கள். வெற்றி நிச்சயம். 

- Mrs. ரூபி அருண்      

 

ஜெபக்குறிப்பு: 

டியூசன் சென்டர் ஊழியத்தில் நம்மோடு இணைந்து பணிபுரியும் டியூஷன் மிஷனெரிகளுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al