Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 06-06.2023
Share:

By Village Missionary Movement

Monday, 05-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 06-06.2023

 

கலைநயமுள்ள தேவன்  

 

"என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்து 

கொள்ளும்போது சோர்ந்து போகாதே" - நீதி. 3:11

 

சிற்பக் கலைக்கு பெயர் போனது நமது இந்தியா. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் சிற்பக்கலை வெளிப்படும். சுற்றுலா ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் மகாபலிபுரம் இதற்கு சிறந்த உதாரணம். வட இந்தியாவில் அஜந்தா எல்லோரா குகைகள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. உலகிலேயே மிக உயரமான சிற்பம் சீனா தேசத்தில் உள்ளது. அதன் உயரம் 420 அடி. அந்த சிற்பம் நிறுவுவதற்காக 66 அடி கொண்ட தாமரைப்பூ போன்ற சிங்காசனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் நிறுத்தப்பட்ட கட்டடத்தின் உயரத்தையும் சேர்த்தால் மொத்த உயரம் 502 அடி. இந்த சிற்பத்தை பித்தளை உலோகத்தால் வடிவமைத்துள்ளனர். இதில் மதிப்பு 90 கோடி ரூபாய். இப்படி பலவிதங்களில் சிற்பங்களுண்டு , சிற்பிகளும் உண்டு.  

 

நமது இயேசுவானவர் வித்தியாசமான மாபெரும் சிற்பி என்று வர்ணிக்கலாம். பாவ மனிதன் ஒருவனை எடுத்து அவனை பரலோக மகிமையை வெளிப்படுத்தும் நபராக செதுக்குவதில் அவர் வல்லவர். சமுதாயத்தில் அருவருப்பானவர்கள் என்று நாம் ஒதுக்கித் தள்ளுபவர்களைக் கூட அவர் அழகானவர்களாக மாற்றிய வரலாறு உள்ளது. உலகத்தில் எந்த சிற்ப கலைஞனாலும் இதைச் செய்ய முடியாது. பேதுருவினிடத்தில் காணப்பட்ட மறுதலிக்கும் குணத்தை செதுக்கி அவரை பெரிய பிரசங்கியாராக மாற்றினார். பவுல், மகதலேனா மரியாள், யாக்கோபு போன்ற பலரது வாழ்வு தேவனால் செதுக்கப்பட்டு பரலோக குணத்தைப் பெற்ற சரித்திரங்கள் நமக்கு தெரிந்ததே. 

 

சிற்பகலைஞர் இயேசு உங்களையும் செதுக்கி, உபயோகமான, சிற்பமாக மாற்ற ஆயத்தமாக உள்ளார். அவர் கரத்தில் உங்களை விட்டுக் கொடுத்தால் போதும். பேசத்தெரியாத திக்குவாயனான மோசேயை உருவாக்கி, லட்சக்கணக்கான ஜனங்களை வழிநடத்த பயன்படுத்தினதைப் போல, உங்களையும் அவர் பயன்படுத்த வல்லவர். பயந்த சுபாவமுள்ள கிதியோனை நியாயாதிபதியாய் மாற்றின ஆண்டவர் உங்கள் பயத்தையும் போக்கி பிறரை வழி நடத்தக் கூடிய திறமையை, அபிஷேகத்தை தர முடியும். அவர் விருப்பப்படி உங்களை செதுக்க விட்டுக் கொடுங்கள். தேவையற்ற காரியங்கள், கெட்ட காரியங்கள் செதுக்கப்பட்டு அவர் சித்தம் செய்யும் பாத்திரமாய் நம்மை வனைவார். ஆமென்.

- T. ராஜன் 

 

ஜெபக்குறிப்பு 

நம் பணித்தளங்களில் நடைபெறும் டியூசன் சென்டருக்காக, அநேக புதிய மாணவர்கள் சேர்க்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al