Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  12-03-2021
Share:

By Village Missionary Movement

Friday, 12-Mar-2021

இன்றைய தியானம்(Tamil)  12-03-2021

தேவ சித்தமா, மனுஷ சித்தமா! 

“...தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக் குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்.” – அப். 13:22 

ஒரு இளம் வாலிபன் தன் படிப்பை முடித்து குடும்பத்தின் கஷ்டத்தின் காரணமாக வேலைக்கு சென்றான். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் தான் வேலை செய்திருப்பான். அதற்குள் சரீரத்தில் பெலவீனப்பட்டு வியாதியினால் வேலை செய்ய முடியாமல் வீட்டுக்கு வந்து விட்டான். சம்பாதித்து தன் குடும்பத்தின் வறுமையை மாற்றி ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டுமென்ற ஆசையெல்லாம் கேள்வி குறியானது. தாயார் கண்ணீர் விட்டு ஜெபித்தபோது தேவன் ஒன்றை நினைவுபடுத்தினார். அவன் பிறக்கும் முன்பே அத்தாயார் நீர் எனக்கு ஒரு ஆண்குழந்தையை தருவீரானால் அந்த குழந்தையை உம்முடைய ஊழியத்திற்கு அர்ப்பணிப்பேன் என்று ஜெபித்திருந்தார்கள். தேவன் ஜெபத்தை கேட்டு ஒரு ஆண் குழந்தையும் தந்தார். இந்த சூழ்நிலையில் ஆண்டவர் அவர்கள் செய்த அர்ப்பணிப்பை ஞாபகப்படுத்தினார். ஆண்டவரிடம் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, இனி இவனால் 1 லட்சம் வருமானம் வந்தாலும் அது எனக்கு வேண்டாம் என்று சொல்லி தன் பிள்ளையை ஆண்டவரின் சித்தத்தின்படி ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார்கள். மனுஷிக  விருப்பத்தை விட்டு தேவ சித்தத்தை செய்தார்கள். தேவன் அந்த அர்ப்பணிப்பை பார்த்து அவனை சுகமாக்கி, பூரண சுகத்தை கொடுத்து இன்றைக்கு அவனை ஊழியத்தில் பயன்படுத்தி வருகிறார். 

தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு தன்னுடைய ஜனத்தை ஆளும்படி தேவன் சவுலை இராஜாவாக அபிஷேகம் பண்ணினார். ஆனால் இவரோ தேவனுக்கு கீழ்ப்படியாமல் தன் இஷ்டத்தின்படி செய்தார். அதினால் தேவன் அவனை இராஜாவாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டு அவனைத் தள்ளி தன் இருதயத்திற்கு ஏற்றவனாக தாவீதைக் கண்டு அவனை இராஜாவாக அபிஷேகம் பண்ணினார். அவன் தேவனுக்கு சித்தமானதையெல்லாம் செய்தான். ஆகவே தேவன் தாவீதை குறித்து சாட்சியும் கொடுத்தார். 

எனக்கு அன்பானவர்களே! இதை வாசிக்கின்ற உங்களைக் குறித்து என்ன? தேவன் இந்த பூமியில் படைத்திருக்கிற ஒவ்வொரு மனுஷனைக் குறித்தும் ஒரு நோக்கம் இல்லாமல் படைக்கவில்லை. சவுல் தன் மனவிருப்பத்தின்படி வாழ்ந்து தேவனால் புறக்கணிக்கப்பட்டான். ஆனால் தாவீதோ தேவசித்தம் செய்து தேவனால் என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று நற்சாட்சியும் பெற்றான். நாமும் தேவசித்தம் செய்து வாழ்வோம். தேவனால் நற்சாட்சியும் பெறுவோம். 
-    A. இம்மானுவேல் 

ஜெபக்குறிப்பு:
7000 ஊழியர்களைத் தாங்கும் 7000 வீட்டு ஜெபக்குழுக்கள் உருவாக்கப்பட ஜெபியுங்கள். 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet