By Village Missionary Movement
Sunday, 04-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 05-06.2023
அனைத்து வாலிபர்களுக்கும்
"வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்…" - சங்கீதம் 127:5
திருச்சபையின் வாலிபருக்கான திரைப்படம் காண்பிப்பதற்காக அநேக நாட்களாக ஜெபத்துடன் காத்திருந்தோம். காண்பிப்பதற்கான இரவும் வந்தது. கிராமத்தில் எல்லா பக்கங்களிலும் அந்த நாளுக்கான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. நியூயார்க்கில் பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஒரு இளைஞர் குழுவினர் ஒரு இளம்போதகர் மூலமாக இயேசுவை ஏற்றுக் கொண்ட விதத்தை விளக்கும் திரைப்படமாக அது இருந்தது. மேலும் அநேக வாலிபப் பிள்ளைகள் திருச்சபையின் வாலிபக் குழுவில் சேர்வதற்கு காரணமாக இருக்கும் என்று அந்த திருச்சபையின் வாலிபர்களின் போதகர் ஸ்டீவ் நம்பிக்கையுடன் இருந்தார்.
ஆனால் அந்த மாலைப் பொழுதில் மிக முக்கியமான கால்பந்தாட்ட போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட போவதை அவர் அறியவில்லை. ஆகவே அவர் எதிர்பார்த்ததை விட குறைவாகவே வாலிபர்கள் அன்று வந்தார்கள். குறித்த நேரத்தில் மங்கலான விளக்குகள் மத்தியில் திரைப்படம் ஒளிபரப்பானது. திடீரென அந்த இடத்திற்கு டீ டாக் (T Dog) என்ற வாலிபக் குழுவை சேர்ந்த ஐந்து வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இயேசுவை அறியாதவர்கள். இது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமா அல்லது நாங்களும் இதை பார்க்கலாமா? இலவசம் தானே? என்று கேட்டு அவர்களாகவே பேசிக் கொண்டு படம் முடியும்வரை அமர்ந்து திரைப்படத்தை கண்டு ரசித்தனர். போதகர் ஸ்டீவ் அவர்களுக்கு தர்ம சங்கடமாக இருந்தாலும் அழையா விருந்தாளிகளாக வந்த அவர்களைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டார்.
திருச்சபையில் வாலிபர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியத்தைப் போன்று திருச்சபைக்கு வெளியே இருக்கும் வாலிபர்களுக்கும் ஊழியம் செய்ய இன்று நாம்அழைக்கப்படுகிறோம். இந்த தொழுவத்திற்குரிய ஆடுகள் வெளியே இருக்கின்றன. அவைகளும் இங்கே வர வேண்டும என்று இயேசுவானவர் சொன்னதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே நமது ஆண்டவரின் விருப்பத்தை அறிந்தவர்களாக மந்தையில் சேரா ஆடுகளை கூட்டிச் சேர்க்கும் பணிகளில் தீவிரமாக நாம் செயல்படலாமே!
- Bro.ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
ஜெபக்குழுக்களை ஒருங்கிணைத்து நடத்தும் அநேக தெபொராள்கள் எழும்ப ஜெபிப்போம்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864