By Village Missionary Movement
Saturday, 03-Jun-2023இன்றைய தியானம்(Tamil) 03-06.2023
ஒப்பிட்டுபார்த்தல்
"உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ,…" - மத்தேயு 20:14
ஒரு நாள் காலை வேளையில் மத்தேயு 20-ம் அதிகாரத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். இந்த உவமையில் வரும் முதலாளியைப் பற்றி யோசித்தேன். ஏன் இந்த முதலாளி மற்றவர்களைப் போல சம்பளம் கொடுக்கவில்லை? குறைந்த நேரம் வேலை செய்தவர்களுக்கும், அதிக நேரம் வேலை செய்தவர்களுக்கும் ஒரே சம்பளம் கொடுத்திருக்கிறாரே என்று எண்ணினேன். அப்போது தான் ஒப்பிட்டுப் பார்த்தல் சரியானது இல்லை என்பதை புரிந்து கொண்டேன். குமார் நன்றாக படித்து அரசு தேர்வில் நல்ல மதிப்பெண்களை வாங்கி வெற்றி பெற்றிருந்தான். ஆனந்த வெள்ளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தான். ஆனால் மறுநாள் காலையில் குமார் மகிழ்ச்சியின் அடையாளங்கள் எதுவும் இன்றி துக்கத்தில் மூழ்கி இருந்தான். ஏன் தெரியுமா? அவன் நண்பன் ரவி அவனை விட ஐந்து மார்க்குகள் அதிகம் பெற்றிருந்தான் என்பதை அறிந்துதான். ஒப்பிட்டுப் பார்த்தல் மகிழ்ச்சியின் முக்கியமான எதிரி. நாம் என்ன சாதித்தோம் என்பதில் மகிழ வேண்டும்.
தேவன் நமக்கு வைத்திருக்கும் பாதையில் நாம் ஓட வேண்டும். பிறருடைய சாதனையை ஒப்பிட்டுப் பார்த்தால் மகிழ்ச்சி மறைந்து விடும். சிலர் எவ்வளவோ உயர்ந்த நிலைக்கு வந்தாலும் வேறு சிலருடைய உயர்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து தங்களுக்கு கிடைத்த உயர்வுகளை அனுபவிக்காமல் போகின்றார்கள். தேவன் நமக்குத் தந்திருக்கின்ற நல்ல திறமைகளுக்காக நன்றி சொல்ல வேண்டும். மற்றவர்கள் திறமைகளையும், நல்ல சூழ்நிலைகளையும் கவனிக்க ஆரம்பித்தால் நாம் எல்லாம் பெற்றிருந்தாலும் நமக்கு மகிழ்ச்சி இருக்காது. தேவன் நமக்கு வைத்திருக்கும் பாதையில் நாம் ஓடுவோம். நிச்சயமாக தேவன் நம் வாழ்வில் நன்மையை தருவார். ஒப்பிட்டுப் பார்த்து நாமே நமக்கு தேவ ஆசீர்வாதத்தின் எல்லையைக் குறைக்கக் கூடாது.
ஒரு தாய் தனது இளைய மகனுக்காக ஜெபித்த போது, "தன்னுடைய மூத்த மகனைப் போல, இவனும் ஒரு மருத்துவ படிப்பு சேர்ந்து விட்டால் எனக்கு போதும் ஆண்டவரே!" என்றாள். தேவன், " நீ யார் இளைய மகனுக்கு எல்லையை ஆலயத்தின் மகிமை பெரிதாய் இருக்கும்" என்றார். ஆலயம் என்றால் என்ன? நீங்களே அந்த ஆலயம் என்றார். அது முதல் அந்த தாய் தன் பிள்ளைகளுக்காக ஜெபிப்பதில் அதிக ஜாக்கிரதையாக இருந்தார்கள். எனவே பெற்றோரே! பிள்ளைகளை பிறருடன் ஒப்பிட்டு பார்த்து அவர்கள் வளர்ச்சியைத் தடை செய்யாதீர்கள்! தேவ சித்தத்தில் நிலைத்திருங்கள்.
- Mrs. பெர்லின் செல்லாபாய்
ஜெபக்குறிப்பு
ஜெபக்குழுக்கள் நடைபெறும் வீடுகளில் தேவனுடைய ஆசீர்வாதம் தங்கியிருக்க ஜெபிப்போம்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864