Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 02-06.2023
Share:

By Village Missionary Movement

Friday, 02-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 02-06.2023

 

நேர்த்தியின் ஆண்டவர்  

 

“அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்:...” - பிரசங்கி 3:11 

 

வழிப்போக்கன் ஒருவன் வயல்வழியே நடந்து வந்தான். அப்போது பூசணிக்காய் தோட்டத்தில் பெரிய பெரிய பூசணிக்காய்கள் காய்த்து தரையில் கொடி படர்ந்திருந்தது. அதை பார்த்த வழிப்போக்கன் "என்ன கடவுளுடைய சிருஷ்டிப்பு! நிமிர்ந்து நிற்க முடியாத செடியில் போய் இவ்வளவு பெரிய பூசணிக்காய்களை உருவாக்கியிருக்கிறாரே" என சலித்து கொண்டான். இதை சிந்தித்தவாறே நடந்து வந்தான். வெயில் அதிகமாயிருந்ததால் களைப்பின் மிகுதியினால் சாலையோரத்திலிருந்த ஒரு ஆலமரத்தின் நிழலில் படுத்தான். படுத்தவன் அயர்ந்து தூங்கிவிட்டான். சிறிது நேரத்தில் ஆலமரத்தின் சிறிய பழம் ஒன்று அவன் தலையில் விழுந்தது. பூசணிக்காயையே நினைத்து கொண்டிருந்தவன், பூசணிக்காய்தான் தலையில் விழுந்துவிட்டது என்று அலறி அடித்து கொண்டு எழுந்து பார்த்தபோது, ஒரு குட்டி ஆலம்பழம் ஒன்று உருண்டு கிடந்தது. "கடவுளே, இந்த பெரிய மரத்தில் பூசணிக்காய் போன்ற பெரிய பழத்தை படைத்திருப்பீரானால் என் தலை தப்பியிருக்காது. ஞானமான உம் செயலுக்கு நன்றி" என்றான்.

 

பழைய ஏற்பாட்டில் ஈசாக்கு-ரெபெக்காள் தம்பதியினரை நாம்அறிவோம். ஈசாக்கிற்கு பெண் பார்ப்பதற்கு ஆபிரகாம் தன் ஊழியரை அழைத்து சில நிபந்தனைகளை சொல்லி அனுப்பிவிடுகிறார். அதின்படி அந்த ஊழியரும் ஆபிரகாமின் சொல்லிற்கு அப்படியே கீழ்ப்படிந்து பெத்துவேலின் மகளாகிய ரெபெக்காளின் வீட்டிற்குச் சென்று காரியங்களை சரியாய் நடப்பித்தார். அப்போது எலியேசர் "என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன்" என்கிறார். 

 

ஆம், பிரியமானவர்களே! நம் தேவன் நேர்த்தியின் ஆண்டவர், அனந்த ஞானமுள்ளவர். நம்மை ஒவ்வொரு நாளும் நேர்த்தியாகவும், நேர்வழியாகவும் நடத்துகிறவர். நம்மை படைத்ததிலிருந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நம்மை நேர்த்தியாய் உருவாக்கியுள்ளார். நம்முடைய சரீரத்தில் உறுப்புக்களை நேர்த்தியாய் உருவாக்கியுள்ளார். இவ்வுலகத்திலுள்ள ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் படைத்த தேவனுக்கு நன்றி சொல்லுவோம். ஒவ்வொரு நாளும் அதைக் காணும்போதும், அதனைக் கண்டு ரசிக்கும் போதும், நேர்த்தியாய் உருவாக்கின தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

- Mrs . சக்தி சங்கர்ராஜ் 

 

ஜெபக்குறிப்பு: 

மாதத்தில் 30 நாட்களில் 30 வீடுகளிலும ஜெபக்குழுக்கள் கிரமமாக நடைபெற ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş